

கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம் சவனூர் பகுதியில் அரசு உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உருது பயின்று வருகின்றனர். சவனூரை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த 39 வயதுடைய ஜெகதீஸ் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார். முதலில் மாணவி என்ன நடக்கிறது என புரிந்துகொள்ளாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து அந்த ஆசிரியர் மாணவிக்கு மீண்டும், மீண்டும் பாலியல் தொல்லை கொடுக்கவே, ஒரு கட்டத்திற்கு மேல் அவரது தொல்லையை தாங்க முடியாத மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி விடுவேன் என்று ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அந்த ஆசிரியர், அவ்வாறு செய்தால் “என கிளாஸ்க்கு நீ வரக்கூடாது, அப்பறோம் நீ இந்த சப்ஜெக்ட் பாஸ் ஆகா முடியாது” என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் பள்ளி மாணவியை முடிந்தவுடன் தான் கூறும் இடத்திற்கு வரவேண்டும் என கூறி ஆசிரியர் மிரட்டியிருக்கிறார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த ஆசிரியர் சிறுமியை அடிவயிற்றில் பலமாக தாக்கியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த மாணவி இந்த சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த பெற்றோர் தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் பள்ளிக்கு சென்று அங்கு வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் ஜெகதீஸ் சரமாரியாக தாக்கினர் .
மேலும் அவரது சட்டையை கிழித்து அவருக்கு செருப்பு மாலை அணிவித்தனர். அதையடுத்து பள்ளிக்கூடத்தில் இருந்து அவரை வெளியே அழைத்து வந்தனர். அங்கும் சிலர் அந்த ஆசிரியரை சரமாரியாக தாக்கி அதன்பிறகு அவரை சவனூர் போலீஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தனர். விசாரணையில், மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்அந்த மாணவி மட்டுமல்லாமல் அந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து ஜெகதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். உருது பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்