இவ்வளவு கொடூரமா கொலை பண்ணது சொத்துக்காகவா? கிருஷ்ணகிரி கொலையில் வெளிவந்த பகீர் உண்மை.. கைது செய்யப்பட்ட 3 குற்றவாளிகள்!

இதனால் ஆத்திரமடைந்த மூவரும் கோவிந்தம்மாளை தீர்த்து கட்ட முடிவு செய்திருக்கின்றனர்...
burgur murder accust
bargur murder accust
Published on
Updated on
2 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஐகுந்தம் கொத்தப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மேல் சீனிவாச புரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், இவரது மனைவியான 56 வயதுடைய கோவிந்தம்மாள் கடந்த 25ம் தேதி ஊரக வேலை திட்டத்தில் அப்பகுதியில் உள்ள பெரிய மலை அடிவாரத்தில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணிக்காக சென்ற அவர் மலை அடிவாரத்தில் காதறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பர்கூர் போலீசார் கோவிந்தம்மாள் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் கோவிந்தம்மாள் காதுகளில் இருந்த கம்மல் மற்றும் கால் கொலுசு காணாமல் போன நிலையில் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் கோவிந்தம்மாள் கட்டையால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட எஸ்.பி.தங்கதுரை உத்தரவின் பேரில் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் இளவரசன் (பர்கூர்), எஸ்.ஐ. க்கள் அமர்நாத், பிரபாகரன், விஜயகுமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தினர்கள். போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கொலை செய்யப்பட்ட கோவிந்தம்மாளின் கணவர் முருகன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் இறப்பதற்கு முன்பாக அவர் தனது 57 சென்ட் நிலத்தை சுப்பிரமணி என்பவருக்கு ஒப்பந்தம் போட்டு கொடுத்து பணம் பெற்றிருந்தார். இந்த நிலையில் அந்த நிலத்தை சுப்பிரமணியிடம் இருந்து முருகனின் அண்ணன் பச்சயப்பனின் மகன் சக்திவேல் வாங்கியதாக சொல்லப்படுகிறது. தங்களின் நிலத்தை சக்திவேல் வாங்கி விட்டாரே என்ற கோபத்தில் கோவிந்தம்மாள் அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் சக்திவேல் தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டி சில நாட்களுக்கு முன்பு குடி பெயர்ந்துள்ளார்.

அப்போது அங்கு சென்ற கோவிந்தம்மாள் சக்திவேலையும் அவருக்கு ஆதரவாக பேசிய உறவினர்களான மேல் சீனிவாசபுரத்தை சேர்ந்த 65 வயதுடைய வெங்கட்ராமன் மற்றும் 64 வயதுடைய கோவிந்தராஜ் ஆகியோரையும் தகாத வார்த்தையால் பேசி திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூவரும் கோவிந்தம்மாளை தீர்த்து கட்ட முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி ஏரி வேலைக்கு சென்று திரும்பிய கோவிந்தம்மாளை சக்திவேல், வெங்கட்ராமன், கோவிந்தராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து கட்டையால் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்கின்றனர்.

Admin

பின்னர் அவரது செல்போன், கால் கொலுசு, காதில் இருந்த அரை சவரன் தங்க கமல் ஆகியவற்றை எடுத்து அந்த பகுதியில் இருந்த குட்டையில் வீசி விட்டு நகைக்காக கொலை நடந்ததை போல நாடகமாடியுள்ளனர். இதையடுத்து சக்திவேல், வெங்கட்ராமன், கோவிந்தராஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். சொத்து பிரச்சனையில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com