

மத்திய பிரதேச மாநிலம், மும்பையில் உள்ள கோவண்டி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நதீம் அலிஸ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் பைகன்வாட் பகுதியை சேர்ந்தவர் 23 வயதுடைய தபசும் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்தத்தக்க சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் நதீம் அலிஸ் தனது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த 13 வயதுடைய இளம் பெண் ஷிஃபா என்ற பெண்ணுடன் பழகி அவரையும் காதலிப்பதாக கூறி அந்த பெண்ணுடனும் நெருக்கமாக இருந்திருக்கிறார். இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்து அவர்களுடன் தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நதீம் அலிஸ் தன்னை தவிர வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதை அறிந்த தபசும் ஷிஃபா குறித்த விவரங்களை அறிந்து கொண்டு நேரடியாக அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
பின்னர் வீட்டில் இருந்த ஷிஃபாவிடம் “நானும் நதீமும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறோம் அவருடன் பேசுவதை விட்டு விடு இல்லையென்றால் நீ உயிருடன் இருக்க மாட்டே” என் மிரட்டி இருக்கிறார். அதற்கு ஷிஃபா ‘என்னை தான் நதீம் உண்மையாக காதலிக்கிறார் நான் அவரை விட்டு பிரிய மாட்டேன்’ என் கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடைபெற்றது. எனவே அச்சமடைந்த ஷிஃபாவின் பெற்றோர் அவரது மகளை தங்களது சொந்த ஊரான பைபாவன் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
தங்களது சொந்த ஊரிலேயே ஆறு மாதம் இருந்த ஷிஃபா அங்கு குளிர் அதிகமாக இருப்பதால் தன்னால் இருக்க முடியவில்லை என கூறி மீண்டும் கோவண்டிக்கு கடந்த மாதம் 28 ஆம் தேதி வந்திருக்கிறார். அப்போது ஷிஃபாவை சந்தித்த நதீம் அவருடன் பேச தொடங்கியிருக்கிறார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த தபசும் தனது சகோதரனுடன் ஷிஃபா வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது ஷிஃபா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையே காதல் குறித்து மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது.
அப்போது தபசும் உடனிருந்த அவரது சகோதரர் அவர் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை தபசுமிடம் கொடுத்த நிலையில் தபசும் ஷிஃபாவின் கன்னத்தில் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். பின்னர் மகள் காயமடைந்ததை அறிந்து வீட்டிற்கு சென்ற ஷிஃபாவின் தந்தை அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு ஷிஃபாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷிஃபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலைக்கு காரணமான தபசும் மற்றும் அவரது சகோதரரை கைது செய்திருக்கின்றனர். தொடர்ந்து பதுங்கி இருக்கும் காதலன் நதீமை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண் காதல் பிரச்சனையால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.