
சென்னை மாவட்டம், வியாசர்பாடியில் உள்ள சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான ஆகாஷ். இவர் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார், ஆகாஷும் அதே பகுதியை சேர்ந்த 30 வயதான அர்ஜுனும் நேற்று இரவு 12 மணியளவில் சிக்கன் ரைஸ் வாங்க அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஆகாஷ் மற்றும் அர்ஜுனை அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஆகாஷ் மற்றும் அர்ஜுனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர், பின்னர் ஆகாஷ் மற்றும் அர்ஜுனை கொலை செய்ய முயற்சித்த அதே பகுதியை சேர்ந்த 19 வயதான விக்னேஷ் மற்றும் 24 வயதான அருணை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அருண் மற்றும் விக்னேஷிடம் மேற்கொண்ட விசாரணையில், அருண் மற்றும் விக்னேஷை, ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் அர்ஜுன் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் சம்பவத்தன்று காலை ஆகாஷ் மற்றும் அர்ஜுன் அருணை அழைத்து நாடு ரோட்டில் முட்டி போடா வைத்து சட்டையை கழட்டி “இப்போ தெரியுதா யார் கெத்துனு” என கேட்டு எல்லோர் முன்னிலையிலும் அருணை அசிங்கப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் அருண் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் அர்ஜுனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி அருணுக்கு அவரது நண்பரான விக்னேஷ் உதவி செய்துள்ளார், அருண் மற்றும் விக்னேஷ் அவரது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து இரவு தனியாக சிக்கிய ஆகாஷ் மற்றும் அர்ஜுனை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் கூச்சலிட நிலையில் அங்கிருந்து இருவரும் தப்பி சென்றுள்ளார். நடுரோட்டில் இருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.