“போன் இருந்த தானே அம்மாகிட்ட சொல்லுவ” - சந்தேகத்தால் வீட்டுக்குள் வைத்து பூட்டிய கணவன்.. வாழ முடியாது என சொல்லி மனைவி தற்கொலை!

கணவர் முத்துக்குமரன் அடித்து துன்புறுத்தியுள்ளார், மேலும் வேலைக்கு செல்லும் போது ஹேமாவை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு
“போன் இருந்த தானே அம்மாகிட்ட சொல்லுவ” - சந்தேகத்தால் வீட்டுக்குள் வைத்து பூட்டிய கணவன்.. வாழ முடியாது என சொல்லி மனைவி  தற்கொலை!
Published on
Updated on
2 min read

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்துள்ள வரிச்சிக்குடி கிரீன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவருக்கு திருமணமாகி குமாரி என்ற மனைவியும் ஹேமா என்ற மகளும் இருந்தார். பட்டதாரியான ஹேமாவிற்கும், கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், வசந்த தம்பதியரின் மகனான செல்வ முத்து குமரனுக்கும் கடந்த (மே 23) ஆம் தேதி  அன்று இரு வீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு திருமணம் நடைபெற்றது. 

Admin

முத்துக்குமரன் பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததால் ஹேமாவை திருமணத்திற்கு பிறகு பெங்களூருவிற்கு அழைத்து சென்று வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். அப்போது ஹேமாவை சந்தேக பட்டு அவரது கணவர் முத்துக்குமரன் அடித்து துன்புறுத்தியுள்ளார், மேலும் வேலைக்கு செல்லும் போது ஹேமாவை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். மாலை முத்துக் குமரன் வந்து பூட்டை திறக்கும் வரை ஹேமா வீட்டிற்குள் இருந்துள்ளார். 

Admin

தனது கணவர் இவ்வாறு செய்வதாக ஹேமா தனது தாயிடம் போனில் தெரிவித்துள்ளார், எனவே இது குறித்து குமாரி முத்துகுமாரனின் தாயிடம் தெரிவித்த நிலையில் அவர் தனது மகனை கண்டித்தார் என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடையாக முத்துக்குமரன் ஹேமாவிடம் சென்று “போன் இருந்த தானே உங்க அம்மாகிட்ட சொல்லுவ” என கூறி ஹேமாவின் போனை வாங்கி உடைத்து போட்டு அவரை சரமாரியாக தாக்கி காயப்படுத்தியுள்ளார். 

தனது மகளை போனில் தொடர்கொள்ள முடியதாதல் பயந்த குமாரி மற்றும் கலியபெருமாள் இது குறித்து தங்களது சம்பந்தி லட்சுமணன் மற்றும் வசந்தவிடம் கேட்டுள்ளனர். எனவே வசந்த பெங்களூருவிற்கு சென்று தனது மகன் மற்றும் மருமகளுடன் ஒரு வரம் தங்கி இருந்து மருமகளை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார். இதனை அறிந்த குமாரி ஆடி மாதம் என்பதால் தனது மகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது ஹேமா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. 

ஹேமா தனது தாயிடம் நடந்தவற்றை சொல்லி வருத்தப்பட்ட நிலையில் ஹேமாவிற்கும் முத்துகுமாரனுக்கு திருமணம் செய்து வாய்த்த பெரியவர்களை முன்னிலையில் இரு வீட்டாரும் இது குறித்து பஞ்சாயத்து பேசியுள்ளனர். அப்போது தனது கணவனுடன் வாழ விருப்பம் இல்லை என கூறி ஹேமா தனது பெற்றோருடன் தங்களது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த (ஆக 02) இரண்டு நாட்களுக்கு முன்பு ஹேமா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஹேமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

தற்போது ஹேமாவின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் முத்துக்குமரன் மற்றும் அவரது குடும்பத்தை கைது செய்யும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மனைவியை கணவன் வீட்டிற்குள் வைத்து பூட்டியது மற்றும் ஹேமா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com