

சென்னை,திருவான்மியூர்,மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் இவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 40 வயதில் மஞ்சு என்ற மனைவி உள்ளார். கடந்த 10 ம் தேதியன்று, தனது கணவர் அலுவலகத்திற்கு சென்றவுடன் மஞ்சு வீட்டில் தனியாக இருந்தார். அப்பொழுது சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்த ஒருவர் வீட்டில் தனியாக இருந்த மஞ்சுவிடம் “தங்கள் வீட்டிற்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது” எனக் கூறி குடுகுடுப்பை டப்பாவை ஆட்டி பல தடவை கூறியுள்ளார்.
இதனை வீட்டில் இருந்த மஞ்சு செவிகொடுத்து கேட்க மனபாரத்தில் இருந்த அவர் உடனே குடுகுடுப்பைக்காரன் இடம் இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அவர் 20,000 பணம் செலவாகும் உடனே பரிகார பூஜை செய்து தோஷத்தை விலக்குகிறேன். என சொன்னதன் பேரில், அதை நம்பி மஞ்சு 10 ஆயிரம் ரூபாய் தருவதாக மஞ்சு கூறியுள்ளார். இந்த தொகை போதாது என சொல்லி எதோ எதோ பேசி மேலும் அந்தப் பெண்ணின் கவனத்தை அவர் திசை திருப்பியுள்ளார்.
பின்னர் பெண்ணின் கழுத்தில் அணிந்துள்ள நகையும் காதில் அணிந்திருந்த தோடையும் வாங்கிகொண்டு பூஜைக்கான பொருட்கள் வாங்கி வருவதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளார். வெகுநேரமாகியும் திரும்பவும் வீட்டுக்கு வராமல் இருந்த நபர் மீது சந்தேகம் எழுந்தவுடன் மஞ்சு தனது கணவருக்கு இதுபற்றி தெரிவித்தார். ஏமாற்றபட்டதை அறிந்த அந்தப் பெண் தனது கணவருடன் திருவான்மியூர் காவல் நிலையம் வந்து இதுகுறித்து புகார் அளித்தார் . புகாரை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் புகாரி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து சம்பவம் நடந்த இடத்தில் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமாக கொட்டிவாக்கம் அருகில் சுற்றித்திரிந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அவர் கொட்டிவாக்கம் அன்னை சத்யா சாலை எம்ஜிஆர் நகரை சேர்ந்த 50 வயதுடைய பாலமுருகன் என்பதும் மஞ்சுவை ஏமாற்றி பணம் மற்றும் நகை பறித்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து அவரிடமிருந்த மூன்று சவரன் தங்க நகை கம்மல் பணம் 2500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.