
சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் 42 வயதான பெண் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் , கணவரை வேலைக்கு அனுப்பிவிட்டு குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பதை வழக்கமா வைத்திருந்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் பக்கத்தின் மூலம் பெண்ணுக்கு சரவணா விக்ரம் என்ற என்ற ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சரவணா விக்ரமிடம் பேசிவந்த பெண் ஒரு கட்டத்திற்கு பிறகு சரவணா விக்ரம் தன்னை முழுமையாக கட்டுப்படுத்த முயற்சிப்பதை அறிந்து அவருடனான பழக்கத்தை துண்டித்துள்ளார்.
மேலும் சரவணா விக்ரம் தன்னை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள கூடாது என தன்னுடைய சமூக வலைதள கணக்குகள் மற்றும் எண்ணையும் மாற்றம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணா விக்ரம் பெண்ணின் அக்காவை தனது முகநூல் பக்கத்தின் மூலம் தொடர்புகொண்டு “ உனது தங்கையின் நம்பர் தரவில்லை என்றால், உனது முகநூல் பக்கத்தில் உள்ள போட்டோக்களை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன்” என மிரட்டியுள்ளார். பின்னர் பெண்ணின் எண்ணையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
பின்னர் அந்த பெண்ணிற்கு கால் செய்த சரவணா விக்ரம் அவரை தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். மேலும் தன்னுடன் அரைகுறை ஆடைகளுடன் வீடியோக்கள் பேச சொல்லியும், அப்படி செய்ய விட்டால் போட்டோக்களை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பதிவிடுவேன் என்றும் மிரட்டி வந்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் சரவணா விக்ரம் செய்யும் கொடுமைகளை தங்க முடியாத பெண் இவரை குறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். மனைவி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர். உடனடியாக மனைவியுடன் சென்று சென்னை சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார். உடனடியாக விசாரணை தொடங்கிய சைபர் கிரைம் போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.
விசாரணையில் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த கோபி என்ற நபர் திருமணமாகி குழந்தைகள் இருக்கும் சூழலில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் சரவணா விக்ரம் என்ற போலியான பெயரில் ஒரு முகநூல் பக்கத்தை வைத்துக் கொண்டு அதில் நல்ல தத்துவங்களை, இயற்கையான புகைப்படங்களை போன்றவற்றை பதிவு செய்து தன்னை ஒரு நல்ல மனிதராக காண்பித்துக் கொண்டுள்ளார்.
இதனை நம்பி இவரிடம் பேசும் பெண்களிடம். முதலில் நட்பாக பேசி பின்னர் அவர்களது புகைப்படங்களை வாங்கி வைத்து கொண்டு அதை மார்பிங் செய்து பிளாக்மெயில் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். கோபியின் போனை பறிமுதல் செய்த போலீசார் பல பெண்களை கோபி பிளாக்மெயில் செய்திருப்பது தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்