“கல்லூரியில் மாணவியை நாசம் செய்த பேராசிரியர்” - வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய நபர்.. மாறி மாறி பெண்ணுக்கு கொடுத்த டார்ச்சர்!

மாணவியை தொடர்புகொண்ட அதே கல்லூரியின் மற்றொரு பேராசிரியர் சேகர் ரெட்டி மாணவியை மிரட்டியுள்ளார்...
“கல்லூரியில் மாணவியை நாசம் செய்த பேராசிரியர்” - வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய நபர்.. மாறி மாறி பெண்ணுக்கு கொடுத்த டார்ச்சர்!
Published on
Updated on
2 min read

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற ஆன்மீக நகரமாக விளங்குவது திருப்பதி அப்பகுதியில் இயங்கி வரும் சன்ஸ்க்ரிட் என்ற பல்கலைக்கழகத்தில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் ஒடிசாவை சேர்ந்த 19 வயதுடைய பெண் ஒருவரை இளங்கலை முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அங்கு பணிபுரியும் லக்ஷ்மன குமார் என்ற உதவி பேராசிரியர் மாணவிகளிடம் வகுப்பறையில் உரசுவது, தேவையில்லாமல் பேசுவது என தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

ஒடிஷா மாணவியிடம் தன்னை நல்லவர் போல கட்டிக்கொண்ட லக்ஷ்மன குமார். அவ்வப்போது மனைவியிடம் செல்போனில் பேசி பழகி வந்த நிலையில் ஒரு நாள் மாணவியை தனியாக அழைத்து கல்லூரியில் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் மனமுடைந்த மாணவி இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகாரளித்த நிலையில் விசாரணை மேற்கொண்டு பேராசிரியர் இடைக்கால சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். பின்னர் மாணவி வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற நிலையில் மாணவியை தொடர்புகொண்ட அதே கல்லூரியின் மற்றொரு பேராசிரியர் சேகர் ரெட்டி மாணவியை மிரட்டியுள்ளார்.

லக்ஷ்மன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்து வைத்திருந்த சேகர் மாணவி தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் இல்லையென்றால் அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். தொடர்ந்து இதனை அறிந்த சக மாணவர்கள் இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகாரளித்த நிலையில் மாணவி திடீரென அவரது சொந்த ஊரான ஒடிஷாவுக்கு சென்றதை சொல்லப்படுகிறது. இருப்பினும் இது குறித்து சக மாணவர்கள் பேராசிரியர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்து மாணவி நேரடியாக வந்து குற்றம் சொன்னால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்திருக்கின்றனர். எனவே தங்கள் மீது புகார் அளிக்க கூடாது என பேராசிரியர்கள் மாணவியை மிரட்டி அவரது சொந்த ஊருக்கு அனுப்பியுள்ளனர் என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து விசாரித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com