

திருநெல்வேலி மாவட்டம், பழைய பேட்டையில் இயங்கி வரும் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில், 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அது போல இக்கல்லூரியில் முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி அஸ்வதி. இவர் வகுப்பிற்கு பாடம் எடுக்க வந்த சகாயமேரி என்ற பேராசிரியை சரிவர பாடம் எடுக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அஸ்வதி இது குறித்து கல்லூரியின் முதல்வர் சுமிதாவிடம் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால் கல்லூரி முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் மாணவி கல்லூரியின் உள்ள புகார் குழுவில் இது குறித்து புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த குழுவின் பொறுப்பாளராக முதல்வர் இருந்ததால் மீண்டும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து மாணவி முதல்வரின் தனி புகார் எண்ணிற்கு புகார் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரியின் முதல்வர் சுமிதா கல்லூரியில் நடைபெற்ற விழாவின் போது அஸ்விதா தன் வகுப்பில் பயிலும் மற்றொரு மாணவியுடன் தவறாக இருந்ததாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்த சம்பவத்தில் மனமுடைந்த மாணவி இது குறித்து தனது வலைதள பக்கத்தில் பேசி வீடியோ பதிவிட்ட நிலையில் அதனை பார்த்த தனியார் யூடியூப் சேனல் ஒன்று மாணவியை பேட்டி எடுத்து அதை அவர்களது சேனலில் பதிவிட்டிருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு கீழ் குறிப்பிட்ட இரண்டு பெயர்களில் இருந்து மட்டும் மிகவும் ஆபாசமான கருத்துக்கள் தொடர்ந்து வந்திருக்கிறது. பின்னர் இந்த பெயர் யாருடையது என பார்த்தபோது கல்லூரி முதல்வரான சுமிதாவுக்கு அவரது கணவரும் ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டது தெரியவந்தது.
இது குறித்து மாணவி ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், நெல்லை மாநகர காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு. மாணவிக்கு எதிராக ஆபாசமான முறையில் கருத்துகளைப் பதிவிட்ட கல்லூரி முதல்வர் சுமிதா மற்றும் அவரது கணவர் பொன்னுத்துரை ஆகிய இருவரையும் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.ஒரு அரசு மகளிர் கல்லூரியின் முதல்வரே, தனது மாணவியிடம் ஆபாசமாக பேசியது மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.