“கொலைக்கு பழி தீர்த்த உறவினர்கள்” - ரெஸ்டாரண்ட் வெளியில் நடந்த கத்திக்குத்து.. காத்திருந்து தாக்கப்பட்ட கமலக்கண்ணன்!

காவல்நிலையத்தில் கையெழுத்திட அவரது நண்பர் விக்னேஷ்வரனுடன் இருசக்கர வாகனத்தில்...
“கொலைக்கு பழி தீர்த்த உறவினர்கள்” - ரெஸ்டாரண்ட் வெளியில் நடந்த கத்திக்குத்து.. காத்திருந்து தாக்கப்பட்ட கமலக்கண்ணன்!
Published on
Updated on
2 min read

கோயம்பத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் பதிவான சஞ்சய் குமார் கொலை வழக்கு தொடர்பாக அதில் குற்றம் சாட்டப்பட்ட 21 வயதுடைய கமலக்கண்ணன் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வெளியில் வந்தார். எனவே தினந்தோறும் மாலை காவல் நிலையத்தில் சென்று கையெழுத்திட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார்.

சஞ்சய் குமாரின் உறவினர்கள் சிலர் கமலக்கண்ணனை கொலை செய்யவேண்டும் என அவரை பின் தொடர்ந்து சரியான நேரம் பார்த்து காத்திருந்துள்ளனர். வழக்கம் போல 13ஆம் தேதியன்று மாலை கமலக்கண்ணன் காவல்நிலையத்தில் கையெழுத்திட அவரது நண்பர் விக்னேஷ்வரனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது கொல்லப்பட்ட சஞ்சய் குமாரின் உறவினர்கள் இருசக்கர வாகனத்தை வழிமறித்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பழி தீர்க்கும் நோக்கில் அவர்கள் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து கமலக்கண்ணனை குத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களை விடாமல் விரட்டி சென்ற மர்ம நபர்கள் மத்தம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் ரெஸ்டாரண்ட் அருகே இருவரையும் அரிவாளால் வெட்டி பலத்த காயம் ஏற்படுத்தி உள்ளனர்.

Admin

இந்நிலையில் காயமடைந்த கமலக்கண்ணன் மற்றும் விக்னேஸ்வரனை பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள பெரிய நாயக்கன்பாளையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் கமலக்கண்ணனை குத்திய குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார் காரமடை பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (24) பிரகாஷ் (25) கிருஷ்ணராஜ் (45) மற்றும் சுந்தர்ராஜ் (51) ஆகியோரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், பழி தீர்க்கும் நோக்கத்திலான திட்டமிட்ட தாக்குதல் என தெரிய வந்தது. இதனையடுத்து கொலை முயற்சி வழக்கில் நான்கு போரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com