“இதெல்லாம் சகஜம்” - போதை மருந்து கொடுத்து சீரழிக்கப்பட்ட மருமகள்! இளம்பெண்ணை சிறை வைத்த மாமனாருக்கு வலைவீச்சு

தன்னை மூன்று நாட்களாக அறையில் சிறைவைத்து, தொடர்ச்சியான..
sexual assault case in lucknow
Published on
Updated on
2 min read

லக்னோவில் தனது மருமகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரில் மூத்த ரயில்வே பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 58 வயதான முகேஷ் குமார் திவாரி, பல மாதங்களாக காவல்துறையினரிடம் இருந்து தப்பித்து வந்தார். காவல் துறைக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, அவரை கைது செய்துள்ளனர். தீவிர தடுத்தல் வேட்டையில் ஆலம்பாக்கில் உள்ள ரயில் பெட்டி பழுது பார்க்கும் பட்டறைக்கு அருகே அவர் கைது செய்யப்பட்டார். 

திவாரி ரயில்வேயில் மூத்த பிரிவு பொறியாளராகப் பணிபுரிகிறார் என்றும், விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ரயில்வே ஊழியர் திவாரியின் மகனான அபிஷேக் திவாரிக்கு 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு, அவரின் மனைவி வரதட்சணைக் கொடுமைகளை எதிர்கொள்ள தொடங்கியதாகக் கூறப்படுகிறது. தனது மாமியார் வீட்டில், தான் உடல்ரீதியாகத் தாக்கப்பட்டதாகவும், வலுக்கட்டாயமாக மது அருந்த வைக்கப்பட்டதாகவும் குற்றசாட்டியுள்ளார். 

2024, ஏப்ரல் 20 அன்று, பெற்றோர் வீட்டிலிருந்து திரும்பிய உடனேயே, தனது மாமனார் தனக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து, குடிக்கக் கொடுத்ததாகவும், அதன் பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை மூன்று நாட்களாக அறையில் சிறைவைத்து, தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். அதன் பின்னர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, காவல்துறையை தொடர்பு கொண்டதாகவும், அதை தொடர்ந்து அவர் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண், திருமணமான முதல் நாள் இரவில் நடந்த விருந்தின்போது, ​​தன் நாத்தனார்கள் தன்னை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்ததாகவும், சிகரெட்டுகளை காட்டி சித்திரவதை செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தான் வேண்டாம் என்று சொன்னதால், தாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தனது கணவரும் நாத்தனார்மார்களும் வீட்டில் நண்பர்களுடன் அடிக்கடி பார்ட்டி நடத்துவதாகவும் தைல என்னை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது மாமனாரிடம் புகார் அளித்தபோது, ​​​​அத்தகைய விருந்துகள் "பணக்காரர்களின் பொழுதுபோக்கு" என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது.

மருமகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், வரதட்சணைக் கொடுமை, உடல் ரீதியான தாக்குதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் தொடர்பான பிரிவுகளின் கீழ் கணவர் மற்றும் மாமனார் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது புதிய ஆதாரங்கள் வெளிவந்ததை அடுத்து, பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண்ணின் மாமனார் தப்பி சென்றுள்ளார். சனிக்கிழமை காலை, ஆலம்பாக் பகுதியில் திவாரி காணப்பட்டதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து, விரைந்த காவல்துறை அவரைக் கைது செய்தது என காவல்துறை தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com