அதே மாணவியின் தந்தை என்னை கதற.. கதற.. புது புகார் கொடுத்த குற்றவாளியின் மனைவி! ஆசிட் காயங்களுடன் போராடும் மாணவியின் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்!

ஒரு மாதத்திற்கு முன்பு ஜிதேந்தர் தன்னுடன் சண்டையிட்டதாகவும் மாணவி குறிப்பிட்டுள்ளார்...
அதே மாணவியின் தந்தை என்னை கதற.. கதற.. புது புகார் கொடுத்த குற்றவாளியின் மனைவி! ஆசிட் காயங்களுடன் போராடும் மாணவியின் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்!
Published on
Updated on
2 min read

தில்லி அசோக் விஹார் பகுதியில் உள்ள தில்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது சமீபத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இருபது வயதான அந்த மாணவி, லட்சுமிபாய் கல்லூரிக்கு அருகில் ஒரு கூடுதல் வகுப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவர் மீது ஆசிட்டை வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். இதில் மாணவியின் இரண்டு கைகளிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன, எனினும் அவர் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டார்.

தாக்குதலுக்குக் காரணம் என்ன?

பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்தத் தாக்குதலுக்கு முக்கியக் காரணம், குற்றவாளி ஜிதேந்தர் என்பவர் கடந்த ஒன்றரை வருடமாகத் தன்னைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து, தொந்தரவு கொடுத்ததுதான் என்று தெரியவந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு ஜிதேந்தர் தன்னுடன் சண்டையிட்டதாகவும் மாணவி குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு ஜிதேந்தர் மற்றும் அவரது கூட்டாளிகளான ஈஷான், அர்மான் ஆகிய மூன்று பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

வழக்கில் திடீர் திருப்பம்

இந்நிலையில், இந்தக் கொடூரமான ஆசிட் தாக்குதல் வழக்கில் யாரும் எதிர்பாராத ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆசிட் வீசியதில் முக்கியக் குற்றவாளியான ஜிதேந்தரின் மனைவி, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை மீது கடுமையான ஒரு புகாரைத் தாக்கல் செய்துள்ளார். இந்தத் தாக்குதலுக்குப் பல மணி நேரத்துக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை அன்று, குற்றவாளி ஜிதேந்தரின் மனைவி அளித்த எழுத்துபூர்வமான புகாரில், மாணவியின் தந்தை அகீல் என்பவர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டும், மிரட்டலும்

ஜிதேந்தரின் மனைவி அளித்த புகாரின்படி, மாணவியின் தந்தை அகீல் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், தனக்கு ஆபாசமான புகைப்படங்களை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த ஆபாசப் புகைப்படங்களை அகீல், தனது கணவர் ஜிதேந்தருக்கும் அனுப்பி வைத்து, மிரட்டியதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் முதலில் வெள்ளிக்கிழமை அன்று பல்லாஸ்வா காவல் நிலையத்தை அணுகி, அகீல் அனுப்பியதாகக் கூறப்படும் ஆபாசப் புகைப்படங்களை அழிக்கக் கோரியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காவல்துறையின் நிலைப்பாடு

குற்றவாளியின் மனைவியின் இந்த அதிர்ச்சியூட்டும் புகார் குறித்துக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், அகீல் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் ஆசிட் வீசிய வழக்கில் மூன்று குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்றுவரும் நிலையில், மறுபுறம் பாதிக்கப்பட்டவரின் தந்தை மீது பாலியல் பலாத்காரப் புகார் எழுந்துள்ளது, இந்த ஒட்டுமொத்த வழக்கையும் சிக்கலானதாக மாற்றியுள்ளது. இந்தச் சம்பவம் தனிப்பட்ட பகை மற்றும் பழிவாங்கும் உணர்ச்சி காரணமாக நடந்ததா அல்லது சட்டத்தின் போக்கைத் திசை திருப்பும் முயற்சியாகக் குற்றவாளி தரப்பால் இந்தப் புகார் அளிக்கப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறை அதிகாரிகள் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com