

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் 45 வயதுடைய முருகன். இவர் அதே பகுதியில் கூலி தொழில் செய்து வந்த நிலையில் இவருக்கும் பாக்குது ஒற்றை சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கல் உள்ளனர். எனவே முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் த்ரிசியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் முருகன் தாமரை பாடியில் வேலை வந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை திருச்சியில் விட்டு விட்டு தாமரை பாடியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். குடிப்பழக்கம் உள்ள முருகன் வேலையின் அசதி தெரியாமல் இருக்க அவ்வப்போது மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு முருகன் தாமரைப்பாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்தியுள்ளார்.
அப்போது அங்கே மது அருந்திக் கொண்டிருந்த நபர்கள் சிலருடன் முருகனுக்கு வாக்குவாதம் வந்த நிலையில் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கீழே கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து முருகன் தலையில் போட்டு தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த முருகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட முருகன் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த வடமதுரை போலீசார் முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் வளாகத்தில் மது போதையால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.