
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கட்ட கூத்தன் பட்டியை சேர்ந்தவர் 76 வயதான விவசாயி பொன்னையன். இவரது தம்பி 74 வயதான அங்கன். அங்கன் ராணுவத்தில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்று விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு அதே பகுதியில் பூர்வீக சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பூர்வீக சொத்தில் தனக்குரிய சொத்தை தம்பி அங்கனுக்கு தெரியாமல் பொன்னையன் இளையராஜா என்பவருக்கு 6 சென்ட் நிலத்தை விற்பனை செய்துள்ளார்
எனவே நிலத்தின் சர்வே நம்பர் மாறியுள்ளது இதனால் ஆத்திரமடைந்த பொன்னையனின் தம்பி அங்கன் கிராம நிர்வாக அதிகாரியிடம் “எங்களது நிலத்தின் சர்வே நம்பர் எப்படி மாறி உள்ளது” என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த கிராம நிர்வாக அதிகாரி “உங்களது அண்ணன் 6 சென்ட் நிலத்தை இளையராஜா என்பவருக்கு விற்பனை செய்துவிட்டார்” என்று கூறியுள்ளார். இத்தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்த அங்கன் தனது அண்ணன் பொன்னையனிடம் இது பற்றி கேட்டுள்ளார்.
அதற்கு பொன்னையன் சரியான பதில் சொல்லாமல் அங்கனிடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கன் தனது வீட்டிற்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனது அண்ணனை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்தவரை அப்பகுதியி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் முன்னாள் ராணுவ வீரார் அங்கன் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணனை சொத்துக்காக தம்பியே வெட்டிய கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.