
காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம் சாதவராம் பகுதியை சேர்ந்தவர் பாபு இவரது மகனான 19 வயது மாதவன். இவர் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளார். வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி திரிந்த மாதவன் கஞ்சா, மது போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மேலும் இரவில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்லாமல் பொது கழிப்பறையின் மீது படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாதவன் வழக்கம் போல் மது அருந்திவிட்டு கழிப்பறையின் கூரையின் மேல் படுத்து உறங்கியுள்ளார். காலை வெகு நேரம் ஆகியும் மாதவன் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த மாதவனின் பெற்றோர்கள் கழிப்பறைக்கு சென்று பார்த்துள்ளனர் அப்போது மாதவன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மருத்துவமனையில் மாதவனை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அவரை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாதவன் நேற்று முன்தினம் (ஆக 11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாதவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாதவனின், 17 வயது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சிறுவனை கைது செய்துள்ளனர்.
மாதவன் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரது தலையில் சுமார் 25 கிலோ எடையுடைய கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். காவலர்கள் ஒருவரை மட்டுமே குற்றவாளியென அடையாளம் கண்டு கைது செய்த நிலையில் மாதவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 17 வயது சிறுவன் உட்பட ஐந்து நபர்களின் மீது குற்றம் சாட்டிய நிலையில் போலீசார் அவர்களிடம் இதுவரை எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மாதவன் தரப்பினர் ஆதாரங்களை சேகரிப்பதாக கூறி 17 வயது சிறுவனின் வீட்டை அடித்து உடைத்துள்ளனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாதவனின் உறவினர்களை கட்டுப்படுத்தி அவர்களிடம் “இதுவரை இந்த வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு கைது செய்துள்ளோம், மற்ற குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் காவல் துறைக்கு கிடையாது” என கூறியதனை அடுத்து அவர்கள் சம்பவ இடத்தை விட்டு களைந்து சென்றுள்ளனர். 19 வயதுடைய இளைஞர் தலையில் கல்லை தூக்கி போட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.