“நகையும் ஏசியும் எப்ப வரும்” - வரதட்சணை கேட்டு கொடுமை செய்த மாப்பிள்ளை.. திருமணமான நான்கு நாட்களில் இளம் பெண் தற்கொலை!

சென்ற லோகேஸ்வரி கணவனிடம் கழிப்பறைக்கு செல்வதாக கூறிவிட்டு
“நகையும் ஏசியும் எப்ப வரும்” - வரதட்சணை கேட்டு கொடுமை செய்த மாப்பிள்ளை.. திருமணமான நான்கு நாட்களில் இளம் பெண் தற்கொலை!
Published on
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டம் முஸ்லீம் நகர் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான லோகேஸ்வரி, இவருக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் காட்டவூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான 37 வயது பன்னீர் என்பவருடன் பெரியவர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம்(ஜூன் 30) மறு வீட்டிற்கு தன் தாய் வீட்டிற்கு வந்து லோகேஸ்வரி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

திருமணத்தின் போது பன்னீர் குடும்பத்தார் வரதட்சணையாக 10 சவரன் நகை, ஒரு பைக் , ஏசி மேலும் சில சீர்வரிசை பொருட்களை கேட்டுள்ளனர். அதற்கு லோகேஸ்வரியின் பெற்றோர் ஐந்து சவரன் நகை போட்டு மற்ற பொருட்களை வாங்கி கொடுப்பதாக ஒப்புக்கொண்டு திருமணத்தில் ஐந்து சவரன் நகைக்கு பதிலாக நான்கு சவரன் நகை போட்டு பைக் வாங்கி கொடுத்து சீர்வரிசை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்த நாள் இரவில் இருந்தே லோகேஸ்வரியை, பன்னீர் மற்றும் அவரது தாய், தந்தை, நாத்தனார் என அனைவரும் ஒரு சவரன் நகை மற்றும் ஏசி கேட்டு தொல்லை செய்து வந்துள்ளனர். மேலும் திருமணமான மறுநாளே வீட்டில் இருந்த எல்லா வேலைகளையும் லோகேஸ்வரி ஒருவரை மட்டுமே செய்ய சொல்லி கொடுமை செய்துள்ளனர். பெரிய மருமகள் 12 சவரன் எடுத்து வந்ததாக கூறி சித்ரவதை செய்துள்ளனர்.

pannir and their mother
pannir and their mother

இதற்கிடையே தாய் வீட்டிற்கு சென்ற லோகேஸ்வரி இவற்றையெல்லாம் தாய் மற்றும் தங்கையிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். லோகேஸ்வரிக்கு சமாதானம் கூறி தாய் மற்றும் தங்கை உறங்க சென்ற நிலையில் தனது அறைக்கு சென்ற லோகேஸ்வரி கணவனிடம் கழிப்பறைக்கு செல்வதாக கூறிவிட்டு கழிவறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கழிவறைக்கு சென்ற லோகேஸ்வரி வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் பன்னீர் சந்தேகம் அடைந்துள்ளார்.

எனவே தனது அத்தை இடம் நடந்ததை கூறி கழிவறைக்கு சென்று பார்க்க வலியுறுத்தியுள்ளார். இதனை அடித்து லோகேஸ்வரியின் அறைக்கு வந்த அவரது தாயார் கழிப்பறை கதவை தட்ட எந்த பதிலும் வராமல் இருந்துள்ளது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது லோகேஸ்வரி பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லோகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் லோகேஸ்வரியின் குடும்பத்தார் அளித்த தகவலின் படி பன்னீர் மற்றும் அவரது தாயை கைது செய்த நிலையில் பன்னீரின் தந்தை மற்றும் சகோதரியை தேடி வருகின்றனர். திருமணமான நான்கு நாட்களில் லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தார் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com