“விடிய விடிய சடலத்துடன் இருந்த பெண்” - தகாத உறவில் இருந்த கணவன்.. 63 வயதிலும் கழுத்தறுத்து கொலை செய்த மனைவி!

இரவு உணவு சாப்பிடும்போது கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம்
“விடிய விடிய சடலத்துடன் இருந்த பெண்” - தகாத உறவில் இருந்த கணவன்.. 63 வயதிலும் கழுத்தறுத்து கொலை செய்த மனைவி!
Published on
Updated on
1 min read

நெய்வேலி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் 63 வயதான கொளஞ்சியப்பன், இவர் என்எல்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது ஓய்வு பெற்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள தனியார் ஜவுளி கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பத்மவதி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ள நிலையில் பிள்ளைகளை இருவரும் வெளியூரில் உள்ளனர்.

வீட்டில் கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர், இதற்கிடையே கொளஞ்சியப்பனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மதத்திற்கு முன்பு பத்மாவதி தனது கணவர் மீது நெய்வேலி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்கனவே இருந்த வாக்குவாதம் மேலும் முற்றியுள்ளது. இந்நிலையில் கொளஞ்சியப்பன் வழக்கம் போல் நேற்று (ஜூலை 01) வேலைக்கு சென்று வந்துள்ளார். இரவு உணவு சாப்பிடும்போது கணவன் மனைவி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கொளஞ்சியப்பன் பத்மாவதியை தரக்குறைவாக பேசியதாக சொல்லப்படும் நிலையும் கணவன் மனைவி இருவரும் உறங்க சென்றுள்ளனர்.

Admin

கொளஞ்சியப்பன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் கோபத்தில் இருந்த பத்மாவதி கொளஞ்சியப்பன் திட்டியதால் மேலும் ஆத்திரம் அடைந்துள்ளார். இதனால் இரவு தூங்கிக் கொண்டிருந்த கொளஞ்சியப்பனை பத்மாவதி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு காலை விடியும் வரை சடலத்தின் அருகிலேயே அமர்ந்திறுந்துள்ளார். இரவே தூங்க சென்ற கணவன் மனைவி வெகு நேர ஆகியும் வெளியே வராததால் வீட்டிற்குள் சென்று பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பத்மாவதியை கைது செய்து கொளஞ்சியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மனைவியே கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com