
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சத்தியா, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஐந்து வயதில் ஒரு மகளும் மூன்று வயதில் ஒரு மகனும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர், சத்தியாவின் நடத்தை சரியில்லாத காரணத்தினால் பலமுறை சிவா கண்டித்துள்ளார். இருப்பினும் சத்தியா தனது நடவடிக்கைகளை மாற்றி கொள்ளாமல் இருந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிவா சத்தியாவை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையே குழந்தைகளை கூட்டிக்கொண்டு திருவள்ளூருக்கு வந்த சத்தியா பாலாஜி நகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சத்தியாவிற்கு அதே பகுதியை சேர்ந்த அன்பரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறி அன்பரசன் தனது மனைவியை பிரிந்து சத்தியாவுடன் ஒரே வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார். சத்தியா மற்றும் அன்பரசன் இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு குழந்தைகளை போட்டு அடிப்பது அக்கம் பக்கத்தினரிடம் பிரச்சனை செய்வது என ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குழந்தைகளை ஒழுங்காக பார்த்துக் கொள்ளமால் உணவு கூட கொடுக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே நேற்று தெருவில் விளையாடி கொண்டிருந்த சத்தியாவின் குழந்தைகளை கவனித்த அவ்வழியே சென்ற வாலிபர் குழந்தைகளின் கை மற்றும் உடம்பில் இருந்த காயங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் குழந்தைகளிடம் எப்படி இந்த காயம் பட்டது என கேட்டதற்கு குழந்தைகள் “அம்மா தான் சூடு வச்சாங்க” என கூறியுள்ளனர். எனவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மேலும் இதுகுறித்து திருவள்ளூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சத்தியா மற்றும் அவரது காதலன் அன்பரசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் சத்தியா தனது குழந்தைகளுக்கு சூடு வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் குழந்தைகளை மீது திருவள்ளூரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.