கஞ்சா போதை தலைக்கேறிய இளைஞரின் வெறிச்செயல்.. சொந்த தாத்தா, பாட்டியை தீ வைத்து கொளுத்திய பேரன்!

பின்னர் வீட்டில் இருந்த கட்டிலில் கட்டி வைத்துள்ளார்
மன்னார்குடி murder
Published on
Updated on
2 min read

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த காரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (32) பொறியியல் பட்டதாரி இளைஞர் ஆவர். இவரது தந்தை கலியமூர்த்தி மனைவி தேவியை பல ஆண்டுகளாக பிரிந்து வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அய்யப்பன் தனது தாயுடன், தாத்தா பிச்சமுத்து(80) மற்றும் பாட்டி சந்திரா (75) ஆகியோருடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில் வேலைவாய்ப்பு இன்றி மன உளைச்சலில் இருந்து வந்த  பொறியியல் பட்டதாரி அய்யப்பன் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளார். இதனை கண்டித்து வந்த குடும்பத்தினர் பேச்சை பொருட்படுத்தாமல் கஞ்சா போதை பழக்கத்தை தொடர்ந்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் இன்று அதிகாலை தனது தாத்தா மற்றும் பாட்டி தூங்கிக்கொண்டிருந்தபோது கஞ்சா போதை தலைக்கேறிய பேரன் அய்யப்பன் தனது தாத்தா, பாட்டியை பீர் பாட்டில் மற்றும் இரும்பு கம்பியால் கொடூராமாக தாக்கியுள்ளார்.

இருவரையும் அடித்தே கொலை செய்த பின்னர் வீட்டில் இருந்த கட்டிலில் கட்டி வைத்துள்ளார். பின்னர் மண்ணெண்ணெய் கொண்டு வந்து தனது தாத்தா, பாட்டி மீது ஊற்றி தீயிட்டு கொளுத்தி உள்ளார்.  இதில் பிச்சமுத்து மற்றும் சந்திரா ஆகிய முதியவர்கள் இருவரும் உடல் கருகி பரிதமாக கிடந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததையடுத்து வடுவூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் போலீசார், உயிரிழந்த பிச்சமுத்து மற்றும் சந்திரா ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மன்னார்குடி murder

இதுதொடர்பாக அய்யப்பனின் தாய்  கொடுத்த புகாரின் பேரில் வடுவூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது சொந்த தாத்தா, பாட்டியை கஞ்சா போதைக்கு ஆளான பேரன் அடித்து கொலை செய்துவிட்டு, பின்னர் வீட்டில் இருந்த எண்ணெய்யினை ஊற்றி தீவைத்து கொளுத்திய கொடூர செயல் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி பகுதிகளில் கஞ்சா புழக்கம் நாளுக்கு நாள் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து மன்னார்குடி காவல்துறை  அதிகாரிகள்  உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com