கணவனின் ஆணுறுப்பை அறுத்து சாக்கடையில் வீசிய மனைவி! 20 ஆண்டுகால வேதனை.. மதுபோதை சித்திரவதையால் வெட்டி கொலை!

கணவன் குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த மதுவை அமுதாவும்
wife kills husband
Published on
Updated on
2 min read

கோபிசெட்டிபாளையம் அருகே மதுபோதையில் சித்திரவதை செய்த கணவன் வெட்டிக் கொலை - ஆணுறுப்பை அறுத்து சாக்கடையில் வீசிய மனைவி கைது. கோபிசெட்டிப்பாளையம் அருகே, மதுபோதையில் நாள்தோறும் தகராறு செய்து வந்த கணவனை, அவரது மனைவியே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள  பிச்சாண்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமுதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சூர்யா (17) என்ற மகனும், சுவாதி (8) என்ற மகளும் உள்ளனர். தங்கராஜுக்கு நீண்டகாலமாக மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் திருமணமான நாள் முதலே தனது மனைவி அமுதா மற்றும் தாயார் வசந்தி ஆகியோரைத் தினமும் மது போதையில் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் தங்கராஜ். பிள்ளைகள் வளர்ந்த பிறகும் அவர்களின் கண் முன்னாலேயே மனைவியை கொடுமைப்படுத்துவதை தங்கராஜ் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த தங்கராஜ், மனைவி, தாய் மற்றும் மகன் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளார். 20 ஆண்டுகளாக தொடர்ந்து இந்தச் சித்திரவதையால் கடும் மன உளைச்சலில் இருந்த அமுதா,  கணவன் தன்னைத் தாக்கியதால் ஆத்திரமடைந்துள்ளார்.

பின்னர் கோவத்தில் கணவன் குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த மதுவை அமுதாவும் குடித்துவிட்டு, போதையில் படுத்திருந்த தங்கராஜை வீட்டில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆத்திரம் தீராத அமுதா, கணவனின் ஆணுறுப்பை அறுத்து அருகில் இருந்த சாக்கடையில் வீசியுள்ளார்.

murder

தங்கராஜின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது பெற்றோர், ரத்தக் காயங்களுடன் மகன் இறந்து கிடப்பதையும், அருகே அமுதா அரிவாளுடன் அமர்ந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம்  டி.எஸ்.பி சீனிவாசன் மற்றும் போலீசார், இரத்த வெள்ளத்தில் கிடந்த தங்கராஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவனை வெட்டி கொலை செய்த சம்பவ இடத்திலேயே இருந்த அமுதாவை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com