

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில், 16 வயது உயர்நிலைப் பள்ளி மாணவருடன் போதைப்பொருள் பயன்படுத்தி பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட பெண் ஆசிரியைக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
36 வயதான மிஷெல் மெர்கோக்லியானோ என்ற சிறப்புக் கல்வி ஆசிரியை, அந்த மாணவருடன் சட்டவிரோத உறவில் ஈடுபட்டதுடன், அவருக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களையும் வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் பணியாற்றியகொனெஸ்டோகா உயர்நிலைப் பள்ளியிலிருந்து ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முதன்மை சட்ட அமலாக்கம் வெளியிட்ட தகவலின்படி, ஆசிரியை மற்றும் மாணவர் இருவரும் ஒன்றாக கஞ்சா பயன்படுத்திய பின்னர், அவளின் பெற்றோர் வீட்டில் உள்ள படுக்கையறையில் பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சுமார் 15 முறை நடைபெற்றதாகவும், பெரும்பாலும் வேய்ன் பகுதியில் உள்ள ஆசிரியையின் பெற்றோர் வீட்டிலேயே நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட மெர்கோக்லியானோ, உயர்நிலைப் பள்ளி மாணவருடன் பாலியல் உறவு கொண்டதையும், அவருக்கு கஞ்சா வழங்கியதையும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டதாக மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணையில், ஃபீனிக்ஸ்வில்லில் உள்ள ஒரு மருந்தகத்தில் இருந்து அந்த மாணவருக்காக சுமார் 15 முறை மருத்துவ கஞ்சா வாங்கியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர், அந்த மாணவர் இந்த சம்பவங்களை தனது சகோதரியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்ததால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி, குறுகிய கால சிறைத்தண்டனையுடன், மெர்கோக்லியானோ ஆறரை ஆண்டுகளுக்கும் மேலான நன்னடத்தை கண்காணிப்பில் இருக்க வேண்டும். மேலும், அடுத்த 25 ஆண்டுகள் “இரண்டாம் நிலை பாலியல் குற்றவாளி” எனப் பதிவு செய்யப்பட்டவராக இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனுடன், அவரது ஆசிரியர் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், நன்னடத்தை காலத்தில் குழந்தைகளுடன் தொடர்புடைய எந்தப் பணியிலும் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“பெற்றோர்களும் மாணவர்களும் ஆசிரியர்களை நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதுகிறார்கள். ஆனால் பிரதிவாதி அந்த நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துள்ளார். இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது,” என்று மாவட்ட வழக்கறிஞர் கிறிஸ்டோபர் எல். டி பரேனா-சரோப் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.