
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஷாலினி. இவருக்கு தாசிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த மதியழகன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்து நிலையில் ஷாலினி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் ஷாலினியை பெற்றோர்கள் வீட்டில் வைத்திருக்க முடியாமல் அவரிடம் கடுமையாக நடந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஷாலினி பெற்றோரையும் பிரிந்து அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். அப்போது ஷாலினியின் முன்னாள் காதலனான 30 வயதுடைய அஞ்சிக்கு ஷாலினியுடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் பழகி வந்த நிலையில் ஷாலினி அஞ்சியை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நன்றாக சென்று கொண்டிருந்த திருமணவாழ்க்கையில் விரிசல் ஏற்படும் வகையில் ஷாலினிக்கு அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மேகநாதன் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்வது, தனிமையில் இருப்பது என பழகி வந்த நிலையில் இதை பற்றி அஞ்சிக்கு தெரிய வந்துள்ளது. காதலித்த மனைவி இவ்வாறு செய்ததை அறிந்த அஞ்சி தனது இரண்டு வயது பெண் குழந்தையுடன் ஷாலினியை பிரிந்து தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார். தனியாக வசித்து வந்த ஷாலினி மேகநாதனுடன் அடிக்கடி தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஷாலினி கர்ப்பம் அடைந்துள்ளார் இதை மேகநாதனிடம் கூறி “என் வயித்துல வளரும் குழந்தைக்கு நீ தான் அப்பா” என அவரை குடும்பத்தை விட்டு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஷாலினியை திருமணம் செய்து கொள்ள சற்று விருப்பமில்லாத மேகநாதன் இதை மறுத்து வந்துள்ளார். நாளுக்கு நாள் ஷாலினியின் தொல்லை அதிகமாகியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மேகநாதன் ஷாலினியை கொன்றால் தான் நிம்மதியாக வாழ முடியும் என நினைத்து ஷாலினியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி கடந்த கடந்த (ஜூன் 19) தேதி ஷாலினியை தனிமையில் பேச வேண்டும் என்று கிருஷ்ணகிரி காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே இருந்த மேகநாதனின் நண்பன் புகழேந்தி மேகநாதனுடன் சேர்ந்து ஷாலினியை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் கர்ப்பிணி என்றும் பாராமல் ஷாலினியை அவர் போட்டிருந்த துப்பட்டாவை வைத்தே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். மேலும் இது கொலை என தெரியக்கூடாது என ஷாலினியை தூக்கில் தொங்க விட்டுள்ளனர். காட்டு பகுதி என்பதால் கொலை செய்யப்பட்டது யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு காட்டிற்கு விறகு எடுக்க சென்ற ஒருவர் ஷாலினியின் அழுகிய பிணத்தை பார்த்து போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புகழேந்தி மற்றும் மேகநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கர்ப்பிணி சடலமாக இருந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.