
திருவண்ணாமலை நல்லவன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 42 வயதான சஞ்சீவ். இவர் அதே பகுதியில் மேஸ்திரி வேலை செய்து வந்துள்ளார். திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சஞ்சீவே மேஸ்திரி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது பக்கத்து ஊரை சேர்ந்த பிரகாஷ் என்ற மேஸ்திரியுடன் சஞ்சீவுக்கு தொழில் ரீதியாக சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் நாளடைவில் பிரச்சனையாக மாறியுள்ளது, இதில் பிரகாஷ் மீது ஆத்திரம் அடைந்த சஞ்சீவ் சுற்றுவட்டார கட்டிட பொறியாளர்களிடம் “அவனுக்கு யாரும் வேலை குடுக்கக்கூடாது. அப்படி குடுத்த நான் வேலை செய்ய மாட்டேன்” என கூறி மிரட்டியுள்ளார். அந்த பகுதியில் சஞ்சீவ் தவிர வேற மேஸ்திரிகள் இல்லாத நிலையில் சஞ்சீவ் கூறியதை கேட்டு பொறியாளர்கள் பிரகாஷிற்கு வேலை கொடுக்காமல் இருந்துள்ளனர்.
இதனால் பிரகாஷ் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேல் வேலை இல்லாமல் இருந்துள்ளார். வேலை இல்லாததால் பொருளாதாரத்தில் சிரமப்பட்டு வந்துள்ளார், இவையெல்லாம் சேர்ந்து சஞ்சீவ் மீது பிரகாஷிற்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சீவுக்கு ஒரு முடிவு காட்டினாள் தான் தனக்கு வேலை கிடைக்கும் என நினைத்த பிரகாஷ் நேற்று முன்தினம் இரவு சஞ்சீவ் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சஞ்சீவை வேலை பற்றி பேச வேண்டும் என கூறி திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலை கீழ் சிறுபாக்கம் அருகே அழைத்து சென்றுள்ளார் அங்கு ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி பேசிக்கொண்ட நிலையில் ஆத்திரமடைந்த பிரகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சஞ்சீவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சஞ்சீவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சஞ்சீவினி அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சஞ்சீவ் உயிரிழந்ததை அறிந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சஞ்சீவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர். அதன் படி வீட்டில் இருந்த சஞ்சீவை அழைத்து வந்த பிரகாஷ் அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பிரகாஷ் மற்றும் அவருடன் இருந்த ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேஸ்திரி நடுரோட்டில் வைத்து இரவு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.