“காதலர்களை கொன்று கிணற்றில் வீசிய தந்தை” - ஒரு மாதத்திற்கு பிறகு மீட்கப்பட்ட அழுகிய உடல்… லவ் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்!

நாதியின் தந்தை அவரது மகனுடன் சேர்ந்து காதலர்கள் இருவரையும் அடித்து கொலை செய்திருக்கிறார்...
“காதலர்களை கொன்று கிணற்றில் வீசிய தந்தை” - ஒரு மாதத்திற்கு பிறகு மீட்கப்பட்ட  அழுகிய உடல்… லவ் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம்!
Published on
Updated on
1 min read

குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டம் கம்பாலா கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதுடைய நாதி. இவருக்கு அதே பகுதியில் உள்ள 21 வயதுடைய நவீன் ராபிரி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்திருக்கின்றனர். இவர்களது காதலை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில் இது இப்படி சென்றால் கௌரவ குறைவு ஏற்படும் என நினைத்த பெண்ணின் தந்தை இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார். அதன்படி கடந்த (பிப் 03) ஆம் தேதி மகளை பின் தொடர்ந்து சென்ற தந்தை அவரது காதலன் வரும் வரை மறைந்து காத்திருந்துள்ளார். பின்னர் நாதியும் நவீனும் சந்தித்து பேசிக்கொண்ட போது நாதியின் தந்தை அவரது மகனுடன் சேர்ந்து காதலர்கள் இருவரையும் அடித்து கொலை செய்திருக்கிறார்.

தொடர்ந்து கொலையை மறைக்க நினைத்து இருவரது உடலையும் அருகில் உள்ள விவசாய கிணற்றில் வீசிவிட்டு வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். மேலும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க நாதியின் தந்தை தனது மகள் மற்றும் அவரது காதலனை காணவில்லை என் நாகரத்னா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனவே பெண்ணின் வீட்டிற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொக்கொண்டு வந்த நிலையில் காணாமல் போனதாக சொல்லும் நாளன்று வீட்டை விட்டு வெளியேறிய மகளை பின் தொடர்ந்து தந்தை சென்றது தெரியவந்தது. எனவே போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணின் தந்தையிடம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரே மகனின் உதவியுடன் மகளையும் அவரது காதலனையும் கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கம்பாலா கிராமத்திற்கு ஒதுக்குபுறமாக இருந்த கிணற்றில் இருந்து அள்ளுகிய நிலையில் நாதி மற்றும் நவீனின் உடலை மீட்ட காவல் துறையினர் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கொலை செய்த நாதியின் தனத்தை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த நாதியின் தம்பி மற்றும் தாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலித்த காரணத்திற்காக சொந்த தந்தையே மகளை கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com