இப்படி ஒரு சைக்கோ மனநிலையா? காதலித்த பெண்ணுக்கு HIV இரத்தத்தை செலுத்திய தெலுங்கானா இளைஞர்..

மறுப்பு தெரிவித்த நிலையில் அந்த பெண் தனியாக இருக்கும் போது வீட்டிற்கு சென்ற மனோகர் ஒரு சிரஞ்சியால் தனது HIV பாதிக்கப்பட்ட இரத்தத்தை...
இப்படி ஒரு சைக்கோ மனநிலையா? காதலித்த பெண்ணுக்கு HIV இரத்தத்தை செலுத்திய தெலுங்கானா இளைஞர்..
Published on
Updated on
1 min read

தெலுங்கானா மாநிலத்தில் மேட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம் பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதித்த இரத்தத்தை செலுத்திய சைக்கோ நபர்.

தெலுங்கானா மாநிலத்தில் மேட்சல்-மல்கஜ்கிரி பகுதியை சேர்ந்த  மனோகர் என்ற நபர்தனது உறவுக்கார பெண்ணை ஒருதலையாக  காதலித்து வந்துள்ளார். அதை அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம்  தெரியப்படுத்தி திருமணத்திற்கு சம்மதமும் வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சில நாட்களுக்கு பின் மனோகரின் உடல்நிலை குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளனர் அந்த பெண்ணின் குடும்பத்தார். பின்னர் மனோகர் HIV யால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் குடும்பத்தை சேர்ந்த  சிலரும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த பெண்ணின் வீட்டார்  நிச்சயிக்கபட்ட திருமணத்தை நிறுத்த முடிவு செய்துள்ளனர். பிறகு அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் பேசி முடிவு செய்துள்ளனர்.

இதனை அறிந்த மனோகர் பல முறை அவர்களிடம் இது குறித்து தகராறு செய்து வந்துள்ளார். மேலும் நின்ற திருமணத்தை மீண்டும் நடத்துமாறு கட்டாய படுத்தியும் வந்துள்ளார். தொடந்து கோபமடைந்த மனோகர். அன்னோஜிகுடாவில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணத்தைத் தொடருமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மறுப்பு தெரிவித்த நிலையில் அந்த பெண் தனியாக இருக்கும் போது வீட்டிற்கு  சென்ற மனோகர் ஒரு சிரஞ்சியால் தனது HIV பாதிக்கப்பட்ட இரத்தத்தை அவளின் உடலில் செலுத்தி உள்ளார்.  பின்னர் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு அந்த பெண்ணுக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் குடும்பத்தார். அங்கு பெண்ணுக்கு HIV பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது தெரிவந்துள்ளது. இதையடுத்து மனோகரின் மீது  பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். போச்சரம் ஐடி காரிடார் போலீஸை அணுகி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, சனிக்கிழமை மனோகரை கைது செய்து, நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மனோகர் விசாரித்த போலீசார் அதற்கான காரணத்தை கேட்டு அதிர்ச்சி ஆகியுள்ளனர். அந்த பெண்ணும் தன்னை போல் HIV யாழ் பாதிக்க பட்டாள் அட்டவளை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். என்னை தன்  திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால்  அப்படி செய்ததாக தெரிவித்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com