“பெற்ற மகனுடன் கள்ளத் தொடர்பில் இருந்தாரா தாய்?” - தந்தை செய்த கொடூர கொலை… ஏழு வருடங்களுக்கு பிறகு கிடைத்த நீதி!

சொந்த மகனுடன் லோகநாயகி தகாத உறவில் இருப்பதாக கூறி உறவினர்களிடம் குற்றசாட்டு வைத்துள்ளார்...
sakthivel
sakthivel
Published on
Updated on
2 min read

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமபுரத்தில் உள்ள செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் 50 வயதுடைய சக்திவேல். இவர் பெயிண்டர் வேலை செய்து வந்த நிலையில் லோகநாயகி என்ற மனைவியும் 20 வயதில் சதிஷ் என்ற மகனும், மற்றும் 18 வயதில் சங்கீதா என்ற மகளும் இருந்தனர். இரண்டு பிள்ளைகளும் கல்லூரியில் படித்து வந்ததாக சொல்லப்படும் நிலையில் லோகநாயகி வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்து வந்திருக்கிறார். இதற்கிடையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்திவேல் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்த சக்திவேல் மனைவியின் நடத்தை மீது சங்கமடைந்து வாக்குவாதம் செய்துவந்திருக்கிறார். மேலும் சொந்த மகனுடன் லோகநாயகி தகாத உறவில் இருப்பதாக கூறி உறவினர்களிடம் குற்றசாட்டு வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சக்திவேலுக்கு அறிவுரை கூறி மனைவியுடன் சேர்ந்து வாழ கூறியுள்ளனர். ஆனால் தொடர்ந்து மனைவியையும் மகனையும் தவறாக நினைத்த சக்திவேல் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

Admin

வழக்கம் போல (11.3.2019) ஆம் தேதி இரவு கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மகனை அரிவாளால்  சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார். இதனை தடுக்க சென்ற மனைவி மற்றும் மகளையும் அரிவாளால் தாக்கியதாக சொல்லப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராயலா நகர் போலீசார் உயிரிழந்த சதிஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு ஆறு வருங்களாக பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2 ல் நடந்து வந்தது. நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புவனேஸ்வரி சக்திவேலுக்கு ஆயுள்தண்டனை வழங்கியுள்ளார். இதில் சக்திவேல் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையுன், ரூ.7 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com