
பஞ்சாப் அம்ரித்சர் பகுதியை சேர்ந்தவர் ஜோபன் தீப். இவர் விவசாய நிலங்களுக்கு தேவையான பொருட்களை டிராக்டரில் ஏற்றி செல்லும் வேலையை செய்து வந்துள்ளார். இவ்வாறு விவசாய பொருட்களை பக்கத்து ஊருக்கு ஏற்றிச் செல்லும் போது ஜோபனுக்கும் சுக்பீர் என்ற பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. சுக்பீரும் ஜோபனும் வேறு வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக இருந்து வந்துள்ளனர்.
சில நாட்களுக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகளை செய்து விட்டு நீதிமன்றத்தில் இரு குடும்பத்தாரிடம் தங்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி மனு கொடுக்க நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது நீதிமன்றத்தில் இருந்த சுக்பீரின் உறவினர் அவரது தந்தை கால் செய்து தகவல் அளித்துள்ளார். இதனை அடுத்து நீதிமன்றத்திற்கு வந்த சுக்பீரின் தந்தை காதல் ஜோடிகளிடம் பேசி அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு காதலர்களை தனி அறையில் போட்டு பூட்டி வைத்து உறவினர்களின் உதவியுடன் சுக்பீரின் தந்தை காதல் ஜோடிகளை அடித்து கரண்ட் ஷாக் கொடுத்து கொடுமை செய்த நிலையில் இறுதியில் இருவரையும் தன் கைகளாலேயே கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அந்த கத்தியை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்ற சுக்பீரின் தந்தை நடந்ததை காவலர்களிடம் கூறி சரணடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இதற்கு உதவியாக இருந்த உறவினர்களை தேடி வருகின்றனர். மேலும் சுக்பீரின் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்ததற்காக மகளையும், மகள் காதலித்த நபரையும் தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.