பெற்ற மகனை கிணற்றில் வீசிக் கொன்ற தந்தை… சடலமாக மீட்கப்பட்ட 6 வயது குழந்தை! தலைக்கேறிய குடிபோதையை தான் காரணமா?

4 பெண் குழந்தைகளும் தந்தையின் கொடூர செயலால் தம்பியை இழந்து கதறி அழுவது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
villupuram son murder
Published on: 
Updated on: 
2 min read

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வராஜ் (40). இவரது மனைவி தேவி (35). இந்த தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகளும், ஆறு வயதில் சஞ்சய் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. சஞ்சய் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த மூன்று நாட்களாக குடிபோதையில் செல்வராஜ் தகராறு செய்து வந்துள்ளார்.  

நேற்று தலைக்கேறிய குடிபோதையில் இருந்த செல்வராஜ் ஆத்திரத்தில் வீட்டில் சண்டை போட்டுவிட்டு, தனது 6 வயது மகன் சஞ்சய்யை ஏமாற்றி தூக்கி சென்றுள்ளார். பின்னர் தன்னுடைய வீட்டிற்கு பின்னால் உள்ள கிணற்றில் குழந்தையை வீசி உள்ளார். அப்போது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கிணற்றில் குதித்து குழந்தையை மீட்க முயற்சி செய்துள்ளனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும் மீட்க முயன்ற போது குழந்தை கிடைக்காமல் உள்ளே மூழ்கியுள்ளது. 

villupuram baby murder

அதையடுத்து நல்லான்பிள்ளைபெற்றால் பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு செல்வராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கீழ்ப்பென்னாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர், கிணற்றில் மூழ்கிய சிறுவனை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தேடினர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் உதவியுடன் தந்தையால் தூக்கி வீசப்பட்ட 6 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டான்.

villupuram baby murder

மேலும் நல்லான் பிள்ளை பெற்றால் காவல்துறை ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் தாய் மற்றும் 4 சகோதரிகள் கதறி அழுவது காண்போர் மனதை பதற வைக்கிறது. அந்த 4 பெண் குழந்தைகளும் தந்தையின் கொடூர செயலால் தம்பியை இழந்து கதறி அழுவது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.