புனேவில் கஹுன்ஜே ரியல் எஸ்டேட் அதிபரைக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இருவரையும் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சேதன் சௌத்ரி, ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநர் கேதன் அகர்வாலின் வருங்கால மனைவி சியா கோயலுடன் சேர்ந்து தீட்டிய சதித்திட்டத்தின் பேரில், ஜூன் 18 அன்று லோகட் கோட்டையில் அவரை ஒரு பாறையிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்றதாக புனே ஊரக காவல்துறை கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மார்க்கெட் யார்டு பகுதியைச் சேர்ந்த கோயலும் அவரது கூட்டாளியான சௌத்ரியும் இந்தக் கொலையை மிகத் துல்லியமாகத் திட்டமிட்டதாக புனே ஊரகக் காவல் துணை கண்காணிப்பாளர் கஜானன் டோம்பே தெரிவித்துள்ளார். “கோந்த்வா பகுதியைச் சேர்ந்த சௌத்ரி, பாவனா அணையை நோக்கிய விஞ்சு கட்டா மலைத்தொடருக்கு அருகிலுள்ள ஒரு ஒதுக்குப்புறமான பாறைக்கு அந்த தம்பதியினரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளார். கோயலிடமிருந்து அவர் எதிர்பார்த்த சைகைக்காகக் காத்திருந்துள்ளார். கோயல் அமர்ந்து சௌத்ரியை எச்சரிக்க வேண்டும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தனர் அதுதான் திட்டமும் கூட. கோயல் அவ்வாறு செய்தவுடன், சௌத்ரி அகர்வால் அருகில் வந்து பின்னாலிருந்து அவரைப் பாறையிலிருந்து தள்ளிவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்”, என்று டோம்பே தெரிவித்துள்ளார்.
லோகட் மலையடிவாரப் பகுதிக்கு அருகே இருந்த சிசிடிவி காணொளிக் காட்சிகளில், முகமூடி அணிந்த ஒருவர் (சௌத்ரி) அந்தத் தம்பதியினரைப் பின்தொடர்வது உறுதிசெய்யப்பட்டது. இது இந்த வழக்கில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மேலும், "கோயல் அவருக்கு சைகை காட்டுவதையும் நாங்கள் கவனித்தோம்". இதைத்தொடர்ந்து, சௌத்ரி கோட்டையின் உச்சியில் 10 நிமிடங்களுக்கும் குறைவாகவே செலவளித்ததுடன், 50 நிமிடங்களுக்குள் மலையை ஏறி இறங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. சௌத்ரியிடம் உள்ளே நுழைவது குறித்து விசாரித்தபோது, அந்த நபர் உடற்பயிற்சிக்காக வந்ததாகக் கூறியதாக ஒரு பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார், என்று லோனாவ்லா கிராமப்புற காவல் நிலைய ஆய்வாளர் தினேஷ் தயாடே தெரிவித்தார். சௌத்ரி தனது செல்போனை மார்க்கெட் யார்டில் உள்ள தனது கடையில் வைத்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு ஊழியரின் சாதனத்தை எடுத்துச் சென்றதன் மூலம், பிடிபடாமல் தப்பிக்க முயன்றதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும், அந்த இடம் ஒதுக்குப்புறமாக இருந்ததாலும், வார நாட்களில் பொதுவாக அங்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும், கோயலும் சௌத்ரியும் வேண்டுமென்றே கொலை நடந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததாக ஆய்வாளர் தயாடே தெரிவித்துள்ளார்.
இருவரும் முன்னதாகவே வேவு பார்ப்பதற்காக அங்கு வந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதாக கூறியுள்ளது. மேலும் அவர்கள் இருவரிடமும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அகர்வாலின் உடலை மீட்க உதவிய சிவ்துர்கா மித்ராவைச் சேர்ந்த சுனில் கெய்க்வாட், திங்கள் முதல் புதன் வரை அந்த இடத்திற்கு மக்கள் வருகை குறைவாகவே இருந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், திங்கள் முதல் புதன் வரை கோட்டைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அந்த இடத்திற்கு யாரும் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது. கோயல் முரண்பட்ட வாக்குமூலங்களை அளித்ததாலேயே முதலில் சந்தேகம் எழுந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
முதலில், புகைப்படம் எடுக்கும்போது அகர்வால் வழுக்கி விழுந்ததாகக் கூறினார்; பின்னர், அவரிடம் தண்ணீர் பாட்டிலைக் கொடுக்கும்போது அவர் விழுந்ததாகக் கூறினார். இருப்பினும், அன்றைய தினம் எடுக்கப்பட்ட எந்தப் புகைப்படங்களும் அவரது கைப்பேசியில் இருந்து காவல்துறைக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது காவல்துறைக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு விசாரணை முன்னேற்றத்தில், தம்பதியினர் ஜூன் 6 ஆம் தேதி பாலிக்குத் திட்டமிடப்பட்டிருந்த திருமணத்திற்கு முந்தைய பயணத்தை, கோயல் முன்னதாகவே அகர்வாலின் கடவுச்சீட்டைக் கிழித்து, கலப்பூர் சுங்கச்சாவடிக்கு அருகிலுள்ள ஒரு கழிவறையில் வீசி எரிந்ததாக புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர். "சௌத்ரி இந்தப் பயணத்தை எதிர்த்ததாகக் கூறி, கோயல் பின்னர் அந்தச் செயலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளார் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தொலைபேசியில் உள்ள அழைப்பு விவரப் பதிவுகள் அவர்களுடைய உறவின் ஆழத்தை மேலும் சுட்டிக்காட்டின. நிச்சயதார்த்தம் ஆகியிருந்தபோதிலும், சுமார் எட்டு மாதங்களாக உறவில் இருந்த கோயலும் சௌத்ரியும் அடிக்கடி தொடர்பில் இருந்ததாககாவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களது குடும்பத் தொழில்கள் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகம் கொண்டிருந்தனர் என காவல்துறை தெரிவித்தது. கோயலின் குடும்பம் மசாலாப் பொருட்கள் வியாபாரம் செய்கிறது, அதே சமயம் சௌத்ரியின் குடும்பம் மளிகை வியாபாரம் நடத்துகிறது. மேலும், சௌத்ரி பிபிஏ பட்டம் படித்து வருகிறார், மேலும் அவருக்கு கிரிக்கெட்டிலும் அனுபவம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், சௌத்ரியின் குடும்பத்தினர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். அவருக்கும் கோயலுக்கும் இடையே எந்த உறவும் இருந்ததை தாங்கள் அறியவில்லை என அவரது மாமா உதரம் கூறினார். “நாங்கள் அவள் பெயரை செய்திகளில் மட்டுமே கேள்விப்பட்டோம். என் மருமகன் நிரபராதி,” என்று அவர் கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.