"2 வயது குழந்தையை சீரழித்த தாயின் காதலன்!" பிறப்புறுப்பு, உடல் முழுவது கொடூர காயங்கள்.. பலவார சித்திரவதை வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

தலை, கழுத்து, வயிறு, முதுகு மற்றும் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் இருந்ததாகவும்..
Child abuse case UK
Child abuse case UKChild abuse case UK
Published on
Updated on
2 min read

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் தாயும் அவரது காதலரும் சேர்ந்து அவரின் 2 வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

2025ம் ஆண்டு செப்டம்பர் 12 அன்று, தாய் அலெக்ஸாண்ட்ரா வாக்கர் தனது 2 வயது மகள் மயங்கி விழுந்ததாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். லண்டனிலிருந்து வடமேற்கே சுமார் ஒரு மணி நேரத் தொலைவில் உள்ள ஹார்டிங்டன் க்ளோஸில் உள்ள அவரது வீட்டில், சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ உதவியாளர்கள், அந்த 2 வயது குழந்தையை மாடிப்படிக்கு அடியில் கண்டுள்ளனர். இதனையடுத்து அந்தச் சிறுமி அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் இறுதியில் இரண்டு நாட்களுக்குப் பிறகு "தலையில் ஏற்பட்ட பலத்த காயம்" காரணமாக அந்த 2 வயது குழந்தை உயிரிழந்தது.

டீஸ்சைட் கிரவுன் நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் நடுவர் குழுவிடம், அதிகாரிகள் அந்தக் குழந்தையைக் கண்டபோது, ​​அதன் தலை, கழுத்து, வயிறு, முதுகு மற்றும் அந்தரங்க உறுப்புகளில் காயங்கள் இருந்ததாகவும், அதன் டயப்பர் இரத்தத்தில் நனைந்திருந்ததாகவும், முகம் முழுவதும் வாந்தியால் மூடப்பட்டிருந்ததாகவும் கூறினார். குழந்தை கடுமையாக உலுக்கப்பட்டதாகவும், அதனால் முதுகுத்தண்டு அளவுக்கு மீறி நீட்டப்பட்டு, தலையானது சுவர் அல்லது தரையாக இருக்கக்கூடிய ஒரு கடினமான பரப்பில் மோதியதாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் உறுதிப்படுத்தியதாக அவர் மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவலைக் கூறினார்.

இறந்த குழந்தை
இறந்த குழந்தை இறந்த குழந்தை

25 வயதான தாயும், அவரது புதிய காதலரான 22 வயதான ஹாரிசன் சிம்ப்சனும், கைக்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது மற்றும் குழந்தையை கொடுமைப்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, ​​அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த கோடையில் ஒன்று சேர்ந்த பிறகு, அந்தத் தம்பதியினர் குழந்தையுடன் "அதிக நேரம்" செலவழித்ததாகவும், அந்தக் காலகட்டத்தில், குழந்தையின் மரணத்திற்கு வழிவகுக்கும் வகையில் "வாரக்கணக்கில் அந்த குழந்தை கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும்" அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அந்தத் தம்பதியினருக்கு இடையே, அதிகப்படியான போதைப்பொருள் மற்றும் மதுப்பழக்கம் அடங்கிய "ஆரோக்கியமற்ற" உறவு இருந்ததாகவும், அதன் விளைவாக, "இந்தக் குற்றவாளிகளால் குழந்தை வீட்டில் தொடர்ச்சியான வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது" என்றும் அரசு வழக்கறிஞர் குற்றம் சாட்டுகிறார்."பல வாரங்களாக இந்தக் குழந்தை கொடூரமாகத் தாக்கப்பட்டு வந்துள்ளது. தலையில் ஏற்பட்ட அந்தக் கோரமான காயத்தால் ஏற்பட்ட அக்குழந்தையின் மரணம், குழந்தை மீது தொடுக்கப்பட்ட அந்த வன்முறைத் தொடரின் ஒரு முடிவுப் புள்ளி மட்டுமே," என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

அந்தக் குழந்தையின் மரணத்திற்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்பு, குழந்தையின் தாய் கால் எலும்பு முறிவுக்காக குழந்தையை ஒரு பொது மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தார். அப்போது, ​​சில மருத்துவர்கள் குழந்தையை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றி, தாயிடம் திரும்ப ஒப்படைப்பதற்கு முன்பு கவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தை, "உயிரிழப்பை ஏற்படுத்திய தலைக்காயத்தைப் போலவே இதுவும் ஒரு விபத்து அல்ல" என்றும் அவர்கள் விவரிக்கின்றனர்.

குழந்தையின் கால் எலும்பு முறிவு குறித்துத் தெரிவிக்கவே இரண்டு வாரங்கள் காத்திருந்ததாகத் தாய் ஒப்புக்கொண்டதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளார். அக்குழந்தைக்கு 21 எலும்புகள் முறிந்திருந்ததாகவும், "வலுக்கட்டாயமாகப் பிடித்ததன் விளைவாக" உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் பிரேதப் பரிசோதனை அலுவலகம் கண்டறிந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

"இசபெல் இறப்பதற்கு முந்தைய வாரத்தில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, ​​எந்த மருத்துவ உதவியும் நாடப்படவில்லை. மேலும், தன் மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாள் என்பதை நன்கு அறிந்திருந்த பின்னரும், குழந்தையின் மாற்றாந்தந்தை சொன்னபோதுதான் அலெக்ஸாண்ட்ரா வாக்கர் ஆம்புலன்ஸை அழைத்தார்," என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார். மேலும், "வரவிருக்கும் கேள்விகள் அவர்களுக்குத் தெரிந்திருந்தன, ஆனால் அவற்றுக்கு அவர்களிடம் திருப்திகரமான பதில் எதுவும் இல்லை," என்று அவர் திகிலூட்டும் வகையில் மேலும் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com