

இங்கிலாந்து: தனது வளர்ப்பு தந்தையால் 4 வயதிலிருந்தே துன்புறுத்தலுக்கு ஆளான பதின்மவயதுப் பெண் ஒருவர், தான் அனுபவித்த கொடுமைகளை தோழியிடம் கூறியதை அடுத்து உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், இந்த பாலியல் துன்புறுத்தல் உடல் பாகங்களை அடையாளம் காட்டச் சொன்னதில் இருந்து தொடங்கியதாக கூறியுள்ளார்.
19 வயதான சாரா ரியாச்சே, 60 வயதான கேரி நியூவில் (வளர்ப்பு தந்தை) என்பவரால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். சாராவின் தாய், 59 வயதான ஆட்ரி ஹெகன், வேலைக்குச் சென்றிருந்த போதெல்லாம் நியூவில் சாராவை பாலியல் ரீதியாக தாக்கியுள்ளார். இந்த கொடுமைகளை தாங்க முடியாமல் சாரா தனது 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி, ஜூலை 2021-ல் தன்னோடு படித்த பள்ளித் தோழியிடம் மனம் திறந்து பேசிய பின்னரே இந்த உண்மைகள் வெளியேவந்துள்ளது.
சாரா யாரிடம் இதுபற்றித் தெரிவித்தாரோ, அந்தத் தோழியின் பெற்றோர் காவல்துறைக்கு இது பற்றி தகவல் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அதே மாதத்தில் நியூவில் கைதும் செய்யப்பட்டார். மேலும், 2025 ஜனவரியில், 13 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று குற்றச்சாட்டுகளுக்காகவும், 13 வயதுக்குட்பட்ட குழந்தையை உடலுறவின்றி பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டிய அல்லது ஈடுபடுத்திய மூன்று குற்றச்சாட்டுகளுக்காகவும் நியூவில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
ஏப்ரல் 2025-ல் பிரைட்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நியூவில்லுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், "அந்தத் துன்புறுத்தல் தொடங்கியபோது எனக்குச் சுமார் நான்கு வயது இருக்கும்" என்று சாரா தெரிவித்துள்ளார்.
மேலும், "நியூவில் என்னை உடல் பாகங்களின் பெயர்களைச் சொல்லச் சொல்வார், அது எப்போதும் அவருடைய அந்தரங்க உறுப்புகளில்தான் வந்து முடியும்" என்று வருத்தத்துடன் தனது கொடூர நினைவுகளை நினைவு கூர்ந்தார். மேலும், நியூவில் அவரது அந்தரங்க உறுப்புகளை தொடச்சொல்லவும், தகாத முறையிலும் அவர் நடந்துள்ளார் என்று சாரா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். சாராவின் தாயான ஆட்ரி 2013-ல் ஒரு ஆன்லைன் டேட்டிங் தளத்தில் நியூவில்லைச் சந்தித்துள்ளார். அதே ஆண்டில் இருவரும் திருமணமும் செய்துள்ளனர். ஆரம்பத்தில், ஆட்ரி நியூவில்லை, தன்னையும் தன் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள முன்வந்த ஒரு "சிறந்த மனிதர்" என்று வர்ணித்துள்ளார். அந்த உறவு "ஆரோக்கியமானது" என்று அவர் நம்பியுள்ளார். ஆனால், தன் மகளை கொடுமைப்படுத்தியதை கூட தன்னால் அறியமுடியவில்லை என்று மனம் நொந்துள்ளார்.
நியூவில் கைது செய்யப்பட்ட பின்னர் சாரா, "அது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய நிம்மதி. நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பு பல ஆண்டுகளாக இந்த விவகாரம் நடந்துகொண்டிருந்தது. இனி நான் தற்செயலாக அவரை வெளியே பார்க்க முடியாது. இது மிகவும் கடுமையான தண்டனை - நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்