

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த மனைவியே தனது கணவரையும், மூத்த சகோதரியையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்கா, பின்னவாசல் கிராமத்தை சேர்ந்த வீரய்யா என்பவரின் மனைவி கண்ணம்மா (67) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிதம்பரம் (60) என்பவரை திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த 20 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்துள்ளார். சிதம்பரத்திற்கு திருமணமாகி அமுதா என்ற முதல் மனைவியும் சிவராஜ், சிவரஞ்சனி என்ற இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். அமுதாவின் அக்கா கண்ணம்மா, தனது கணவருடன் கள்ள தொடர்பில் இருந்ததாகவும், இருவரும் சேர்ந்து தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக தெரிவித்துள்ளார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்களை திருமணம் செய்துள்ளனர். பின்னர் கண்ணம்மா மற்றும் சித்பரம் கடந்த 20 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
அவர்கள் இருவரும் சேர்ந்து அமுதாவிற்கு அடிக்கடி, பிரச்சனை கொடுத்து வந்த நிலையில், அதனைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தங்கை அமுதா (முதலாவது மனைவி), ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்று தனது கணவர் சிதம்பரம் மற்றும் அக்கா கண்ணம்மா இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டுள்ளார்.
அவ்வீட்டின் அருகில் வசித்து வரும் விஜய பிரகாஷ் என்பவர், கண்ணம்மா வீடு எரிவதை பார்த்து பதறி போய் 100க்கு போன் செய்து தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர்கள், பாதிக்கப்பட்ட இருவரையும் ஊர் மக்கள் உதவியுடன் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீயணைப்பு துறை உதவியுடன் தீயை அனைத்து உள்ளார்கள். தீயினால் பாதிக்கப்பட்ட இருவரும் 90% தீக்காயத்துடன் பேராவூரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், பலனில்லாமல் உயிரிழந்துள்ளனர். பின்னர் இருவரின் உடலும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு செய்வதற்கு செல்லப்பட்டுள்ளது இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர்களை கொளுத்திய அமுதா தானாக சென்று பேராவூரணி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.