இலங்கை, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹட்டன் டிக்கோயா பகுதியில் உள்ள அபோஸ்லி தோட்டத்தை சேர்ந்தவர் 23 வயதுடைய ஹரிணி என்ற பெண். இவர் கடந்த (பிப் 20) ஆம் தேதி குடும்ப தகராறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் ஹரிணியின் உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை பிரேத பரிசோதனை அறைக்குள் அத்துமீறி நுழைந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஆண் ஊழியர்கள் சடலத்துடன் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டிருக்கின்றனர். பின்னர் காலையில் வந்த பிரேத பரிசோதனை கூடத்தின் பொறுப்பாளர் பெண்ணின் சடலம் ஆடை இல்லாமல் நிர்வாணமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படும் நிலையில் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் ஹரிணியின் உறவினர்கள் நேற்று முன்தினம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவமனை நிர்வாகத்திடம் இது குறித்து விசாரிக்க மூன்று நபர்கள் கொண்ட குழுவை நியமிக்க உத்தரவிட்டனர்.
இருப்பினும் போராட்டத்தை கைவிடாத மக்கள் போலீசார் அந்த மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இதனை ஏற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் மூன்று ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யுமாறு போலீசாருக்கு வேண்டுகோள் வைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்ட பெண்ணின் உடலுடன் உடலுறவு வாய்த்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.