10-ம் வகுப்பு சிறுவனுக்கு.. ஹாஸ்டல் வார்டன் பாலியல் தொல்லை! 2 மாதங்களாக தொடர்ந்த கொடுமை.. உதவிய 1098?

14 வயது சிறுவனான இவரை விடுதி வார்டன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது
thiruvannamalai crime
Published on: 
Updated on: 
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஹாஸ்டலில் வெளிமாநில மாணவர் தங்கி இருந்துள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். 14 வயது சிறுவனான இவரை விடுதி வார்டன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

காலாண்டு விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்ற சிறுவன், விடுமுறை முடிந்த பின்னரும் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது பெற்றோர்கள் பள்ளிக்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் தான் கடந்த 7ம் தேதி வேலூர் பேருந்து நிலையத்தில் சிறுவன் மனஉளைச்சலில் அழுது கொண்டிருந்துள்ளார். அவரை பார்த்த ஒருவர் கவனித்து என்னவென்று விசாரித்துள்ளார்.

தனக்கு நடந்தபலியால் துன்புறுத்தல் குறித்து அவரிடம் அழுதுகொண்டே தெரிவித்துள்ளார் சிறுவன். அதையடுத்து அந்த நபர் சைல்டு ஹெல்ப் லைனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. புகாரில் சேத்துப்பட்டு தனியார் ஹாஸ்டலில் வார்டனாக பணியாற்றி வரும் இம்மானுவேல் (25) என்பவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதில் கடந்த 2 மாதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் 4 முறை நடைபெற்றதாகவும் சிறுவன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக சிறுவன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட வார்டன் சந்தவாசல் கிராமத்தை சேர்ந்த இம்மானுவேல் என்பவரை சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் டேவிட் பிஷப் ஹாஸ்டலில் கடந்த 4 மாதங்களாக வார்டனாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com