
கர்நாடக மாநிலம் சந்தப்புரா பகுதியில் வசித்து வந்தவர் 26 வயதான சங்கர். இவர் மானசா என்ற 24 வயதுடைய பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆன நிலையில் தம்பதியருக்கு 3 வருடங்களில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சந்தப்புரா பகுதிக்கு அடுத்துள்ள கிராமத்தில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். சங்கர் கோரமங்களாவிலும் மானசா பொம்மச்சந்திராவிலும் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது மானசாவிற்கு பக்கத்துக்கு தெருவை சேர்ந்த முகில் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த சங்கர் மானசாவை கண்டித்துள்ளார். பலமுறை கண்டித்தும் மானசா திருந்தவில்லை என சொல்லப்படுகிறது. நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இரவு வேலைக்கு சென்ற சங்கர் பாதியிலேயே வேலையை முடித்து வீடு திரும்பியுள்ளார். அப்போது தனது வீட்டின் பெட்ரூமில் முகில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கர் “எத்தனை முறை சொன்னாலும் கேக்க மாட்ட இல்ல, நம்ம குழந்தையின் வாழ்க்கையை ஒரு நிமிடம் யோசித்து பாத்தியா இதுக்கு மேலயும் நீ உயிரோட இருக்கக்கூடாது” என கூறி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மானசாவின் தலையை தனியாக அறுத்து எடுத்துள்ளார். பின்னர் விடியும் வரை காத்திருந்து மானசாவின் தலையை வண்டியில் வைத்து எடுத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்துள்ளார்.
சங்கர் கொடுத்த வாக்கு மூலத்தின் படி வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்த போலீசார் மானசாவின் தலையையும் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கணவன் மனைவியின் தலையை வெட்டி பைக்கில் எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.