கள்ளத் தொடர்பில் இருந்த மனைவியை கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கணவன்.. தனிமையில் இருந்த புகைப்படத்தை அனுப்பி துரோகம் செய்த காதலன்!

இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது...
isaki and balamurugan with priya
isaki and balamurugan with priya
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தருவை பகுதியை சேர்ந்தவர் சிவன்பாண்டி. இவரது மகனான பாலமுருகன் என்பவருக்கும் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஸ்ரீ பிரியா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் உள்ளனர். பாலமுருகன் அதே பி[ஆகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீபிரியா கணவர் பாலமுருகனை பிரிந்து கோவையில் உள்ள காந்திபுரம் இரண்டாவது வீதி பகுதியில் இருக்கும் தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி அங்குள்ள நெட் சென்டர் ஒன்றில் பணிக்கு சென்று வந்த நிலையில், பாலமுருகனின் துரத்து உறவுக்காரரான இசக்கி என்பவருடன் பிரியாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

பின்னர் இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த நிலையில் பிரியாவுக்கும் இசக்கிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இசக்கி பிரியாவுடன் தனிமையில் இருந்த போது எடுத்த புகைப்படங்களை அவரது கணவரான பாலமுருகனின் எண்ணிற்கு அனுப்பிவைத்ததாக சொல்லப்படுகிறது. இதை பார்த்து ஆத்திரம் அடைந்த பாலமுருகன் கோவை வந்த நிலையில், மனைவி தங்கி இருக்கும் தனியார் மகளிர் விடுதிக்கு சென்று உள்ளார்.

தனது மனைவி பிரியாவை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்த நிலையில், அவர் வர மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மகளிர் விடுதி வளாகத்திலேயே மனைவி பிரியாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்திருக்கிறார். மேலும் மனைவியின் சடலத்துடன் புகைப்படம் எடுத்து அதை “துரோகத்தின் சம்பளம் மரணம்” என ஸ்டேட்டஸ் வைத்து அங்கேயே அமர்த்திருந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலமுருகனை கைது செய்தனர். இதை தொடர்ந்து பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். கள்ள தொடர்பில் இருந்த மனைவியை கணவன் வெட்டி கொலை செய்த சமத்துவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com