“வயலில் கள்ள காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்” - மறைந்திருந்து பார்த்து ஆத்திரமடைந்த கணவன்… அடுத்த நொடியே நடந்த கொடூரம்!

இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறிய நிலையில்...
“வயலில் கள்ள காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்”  - மறைந்திருந்து பார்த்து ஆத்திரமடைந்த கணவன்… அடுத்த நொடியே நடந்த கொடூரம்!
Published on
Updated on
1 min read

தெலுங்கானா மாநிலம், மகபூப்நகர் மாவட்டம், பாலமூர் அடுத்துள்ள பந்தமிடி பகுதியை சேர்ந்தவர் சாயிலு. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வினோதா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். சாயிலுவிற்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ள நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து விவசாயம் பார்த்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். இதற்கிடையில் மது பழக்கத்திற்கு அடிமையான நிலையில் தினந்தோறும் குடித்துவிட்டு விவசாயம் செய்யாமல் இருந்திருக்கிறார்.

மேலும் வீட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்து குடித்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வினோதாவிற்கு அதே பகுதியை சேர்ந்த பாலேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாலேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் நெருங்கி பழகி வந்திருக்கின்றனர். நாளடைவில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.

மனைவியின் கள்ளக்காதலை அறிந்து ஆத்திரமடைந்த சாயிலு இது குறித்து வினோதாவிடம் கேட்டு அவரை கண்டித்திருக்கிறார். மேலும் பாலேஷையும் கண்டித்து இருவரது பழக்கத்தையும் கைவிட வேண்டும் என எச்சரித்திருக்கிறார். பின்னர் இருவரும் சிறிது நாட்கள் பேசாமல் இருந்த நிலையில் வினோதா அடிக்கடி வயல்வெளிக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இதில் சந்தேகமடைந்த சாயிலு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மனைவி வயல்வெளிக்கு சென்ற போது அவரை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார்.

அங்கு சாயிலு சந்தேகமடைந்த படி வினோதாவும் பாலேஷும் ஒன்றாக சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் மறைமுகமான இடத்திற்கு சென்று இருவரும் உல்லாசத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த சாயிலு அங்கிருந்த கோடாரியை எடுத்து பாலேஷ் தலையில் சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதனை பார்த்து பயந்த வினோதா அப்பகுதியில் இருந்து தப்பி சென்ற நிலையில் சாயிலு தலைமறைவாகினர். பின்னர் பாலேஷ் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த பாலேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கொலை செய்துவிட்டு தலைமறைவாகிய சாயிலுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மனைவியின் கள்ளக்காதலனை கோடாரியால் வெட்டி கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com