“கணவன் இல்லாத நேரத்தில்.. மனைவியை கடத்தி வேறொருவருடன் திருமணம்?” - வீட்டுக்குள் புகுந்த கும்பல்!

கடத்திச் சென்று வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக கடத்தப்பட்ட பெண்ணின் கணவர் ஜெகன்
Kanyakumari women kidnapped
Published on
Updated on
2 min read

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் எல்லைக்குட்பட்ட சாமிதோப்பு, செட்டிவிளை பகுதியில் காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த ஒரு பெண்ணை 20க்கும் மேற்பட்ட கும்பல் கடத்தி சென்றுள்ளனர். பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கடத்திச் சென்று வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக கடத்தப்பட்ட பெண்ணின் கணவர் ஜெகன் நாகர்கோவில் எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உட்பட்ட சாமிதோப்பு செட்டிவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயா வயது (52). அவரது மகன் ஜெகன் (35) ஆகியோர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது “தனது மகன் ஜெகன் முகிலன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் திவ்யதர்ஷினி (20) என்ற பெண்ணை கடந்த 22/9/2025-ஆம் அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இது பெண் வீட்டாருக்கு விருப்பமில்லாததால் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தனர். அதனால் தென்தாமரைக்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் அவர்கள் தன் மகளுக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என எழுதி கொடுத்து சென்றனர். ஆனால் தொடர்ந்து தன் மகனின் காதல் மனைவியை அழைத்துச் செல்லும் நோக்கத்தில் ஈடுபட்டு வந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலேயும் “நேற்று முன்தினம் சுமார் 20க்கும் மேற்பட்டோர் திடீரென தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து என் மகன் வீட்டில் இல்லாத நேரத்தில் மருமகள் திவ்யதர்ஷினியை அடித்து உதைத்து தர தர என்று இழுத்து காரில் தூக்கிச் சென்றனர்” என்று தெரிவித்துள்ளார். மேலும்  வீட்டில் தனியாக இருந்த தன்னிடம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தான் தனது மருமகளை மற்றொருவருக்கு திருமணம் செய்து வைக்க கடத்திச் சென்றது தெரியவந்தது. இதில் முகிலன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண்ணின் தகப்பனார் சுரேஷ் தாயார் கவிதா ஆகியோர் அடியாட்களுடன் வந்து இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் என் மருமகளை மீட்டு தர முயற்சிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மருமகளுக்கு விருப்பம் இல்லாமல் வேறு ஒருவருக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளனர் என்ற தகவல் தெரிய வருகிறது 

உடனடியாக மருமகள் பிரியதர்ஷினியை மீட்டு தனது மகனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என தாய் விஜயா எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் பெரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் திருமண வயதை கடந்தவர்கள் எனவே கடத்திச் சென்றவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் தென்தாமரைக்குளம் காவல் நிலையத்தில் தூக்கிச் சென்றதாக கூறப்படும் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனபோதும் அவர்களை கைது செய்ய வேண்டும் தனது மருமகளை மீட்டு தர வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com