
கேரள மாநிலம் புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் பவின். இவர் கட்டிட வேலையை செய்து வாழ்ந்து வந்துள்ளார், இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு முகநூல் மூலமாக அதே பகுதியை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. எனவே பவின் மற்றும் அனிஷா புதுக்காடு பகுதியில் தனியாக ஒரு வீடு எடுத்துள்ளனர். நினைக்கும் போது அந்த வீட்டிற்கு சென்று தனிமையில் இருந்து விட்டு பின்னர் இருவரும் அவர் அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இவ்வாறு அவர்களது காதல் சென்று கொண்டிருந்த நிலையில் அனிஷா 2022 ஆம் ஆண்டில் கர்ப்பமடைந்த குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். ஆனால் குழந்தை வேண்டாம் என முடிவு செய்த ஜோடி அந்த குழந்தையை கொன்று வீட்டிற்கு பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர். பின்னர் ஆறு மாதங்கள் கழித்து குழந்தையின் எலும்புகளை தோண்டி எடுத்த அனிஷா அவற்றை ஒரு பையில் போட்டு பவினிடம் கொடுத்துள்ளார்.
அந்த எலும்புகள் இருந்தால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து அவற்றை கண்காணாத இடத்தில் வீசுமாறு கூறியுள்ளார். அதை வாங்கிய பவின் எலும்புகளை தனது வீட்டிற்கு எடுத்து சென்று மறைத்து வைத்துள்ளார். பின்னர் இருவரும் வழக்கம் போல் பழகி வந்த நிலையில் மீண்டும் 2024 ஆம் ஆண்டு அனிஷா இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்துள்ளார். முன்னர் செய்தது போலவே அந்த குழந்தையையும் கொன்று வீட்டிற்கு பின்புறம் புதைத்துள்ளனர்.
தொடர்ந்து இருவரும் பழகி வந்த நிலையில் பவினிற்கு அனிஷாவின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றிய நிலையில் அனிஷா பவினுடன் பேசுவதை முற்றிலும் குறைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பவின் ஏற்கனவே வைத்திருந்த குழந்தையின் எலும்புடன் சமீபத்தில் புதைத்த குழந்தையின் எலும்பையும் தோண்டி எடுத்து அவற்றை காட்டி அனிஷாவை மிரட்டியுள்ளார்.
அதற்கு அனிஷா “இருவரும் சேர்ந்து தான் செய்தோம் சொன்ன நீயும் தான் மாட்டுவ” என கூறி பவினை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த பவின் குழந்தைகளின் எலும்புடன் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். பவின் அளித்த வாக்குமூலத்தின் படி அனிஷாவை கைது செய்த போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு பவின் மற்றும் அனிஷாவை சிறையில் அடைத்துள்ளனர்.
இரண்டு பச்சிளம் குழந்தைகளை கடைகள் ஜோடி கொன்று புதைத்து அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த எலும்புகளை காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பவின் மற்றும் அனுஷாவின் DNA வினையும் மருத்துவ பரிசோதனைக்காக சேகரித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.