

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பியர்சோலா பகுதியில் வசித்து வருபவர் குழந்தை இயேசு. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரிசிலா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் பிரிசிலாவின் தாய்மாமன் மகனான பிரேம் என்பவருடன் குழந்தை இயேசுவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் சேர்ந்து அவ்வபோது ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்நிலையில் பிரேமுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு திருப்பூரில் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
பிரேம் குழந்தை இயேசுவிடம் பங்களா வாங்க வேண்டும் என்று தெரிவித்து வந்த நிலையில் கொடைக்கானல் பகுதியில் ஒரு பங்களா விலைக்கு வந்திருப்பதை அறிந்த குழந்தை இயேசு இதனை பிரேமிற்கு தெரிவிக்க அவரது எண்ணிற்கு தொடர்பு கொண்டிருக்கிறார். அவர் போன் எடுக்காத நிலையில் அவரை facebook மூலம் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அப்போது குழந்தையேசுவின் போனை எடுத்த பிரேமின் மனைவி “அவர் இங்கு இல்லை வேலைக்கு சென்றுள்ளார்” என தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
பின்னர் பிரேமின் பிள்ளைகள் குழந்தை இயேசுவிடம் உறவினர் என்ற முறையில் வீடியோ கால் பேசியதாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த பிரேம் அவரது மனைவி மற்றும் குழந்தை இயேசு இருவரும் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகமடைந்து முதலில் அவரது மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். தொடர்ந்து வழக்கம்போல குழந்தை இயேசுவை மது அருந்த தனியாக அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதை ஆத்திரமடைந்த பிரேம் “என் பொண்டாட்டி கூட பேச நீ யாருடா” என கேட்டு குழந்தை இயேசுவை கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை வைத்து தாக்கியுள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த குழந்தை இயேசுவை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேமை தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.