“அடுத்தடுத்து தூக்கில் தொங்கிய பெண்கள்” - புளிய மரத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம்.. கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன?

கீர்த்தனாவுக்கு திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், அவரது தற்கொலை தொடர்பாக...
Krishnagiri Women Suicide Case
Krishnagiri Women Suicide Case
Published on: 
Updated on: 
2 min read

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே ஒரே கிராமத்தில் 19 வயது இளம்பெண் உட்பட இரு பெண்கள் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த அலேகிருஷ்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது கீர்த்தனா. இவருக்கும் அவரது தாய்மாமன் கந்தராஜ் என்பவருடன் திருமணமாகி ஓராண்டு ஆகிறது.

திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று (செப் 25) வீட்டில் இருந்த அனைவரும் வெளியில் சென்றிருந்த நிலையில் கீர்த்தனா தனது தாய் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் மாலை நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வேலைகளை முடித்துவிட்டு மாலை வீட்டுக்கு திரும்பிய பெற்றோர், மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணையை தொடங்கினர். இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான முனியம்மாள் என்பவரும் கிராமத்தின் அருகே உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Admin

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முன்னியம்மாவின் உடலையும் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கீர்த்தனாவுக்கு திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், அவரது தற்கொலை தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

அதேபோல், முனியம்மாளின் தற்கொலை குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே கிராமத்தில் ஒரே நேரத்தில் 19 வயது இளம்பெண் உட்பட இரு பெண்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com