'வயிற்றில் கட்டி' என நினைத்தால்.. 5 வயது 'சிறுமி 7 மாத கர்ப்பிணி!' கர்ப்பத்திற்கு காரணம் தந்தையா?

தன் மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக சந்தேகிக்கப்பட்டு சிறிது காலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
5-year-old mother
5-year-old mother
Published on
Updated on
4 min read

1939-ம் ஆண்டில், பெருவின் ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கும் பெற்றோர், தங்கள் 5 வயது மகளின் வயிறு வீங்கியிருப்பதைக் கவனித்துள்ளனர். "அந்த வீக்கம் ஒரு கட்டியாக இருக்குமோ?" என்று அஞ்சிய திபுரெலோ மெடினா மற்றும் விக்டோரியா லோசியா எண்ட்ட்ற சிறுமியின் பெற்றோர், தங்கள் மகள் லீனா மெடினாவை, டிக்ராபோவில் உள்ள ஒரு மருத்துவரிடம் காண்பிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், அங்கு சென்றபின் தான் அதிர்ச்சியே காத்திருந்துள்ளது. லீனா மெடினா என்ற அந்த 5 வயது சிறுமி ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்ததை மருத்துவர் கண்டறிந்துள்ளார். மேலும், 1939-ம் ஆண்டு மே 14-ம் தேதி, மெடினா சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ஐந்து வயது, ஏழு மாதம், 21 நாட்களிலேயே அவர் உலகின் மிக இளம் வயதுத் உலகளவில் அறியப்பட்டார்.

மெடினாவின் வழக்கு குழந்தை நல மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன், அவரது குடும்பத்தினர் ஒருபோதும் விரும்பாத சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை, இன்றுவரை, குழந்தையின் தந்தை யார்? என்பதை குழந்தையின் தாய் கூறவில்லை என்பதே உண்மை.

உலகின் மிக இளம் தாயான லீனாவின் வழக்கைச் சுற்றி மர்மம் தொடர்ந்து நிலவி வந்தபோதிலும், லீனா மெடினா எப்படி கர்ப்பமானார்? மற்றும் குழந்தையின் தந்தை யார்? என்பது குறித்து கூடுதல் தகவல்கள் வெளிவந்துள்ளன. அது தகவல்கலாக இல்லாமல் 'இதுவாக இருக்கலாம்' என்ற போர்வையில் வெளியானது. 1933-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி, பெருவின் மிகவும் ஏழ்மையான கிராமங்களில் ஒன்றில் பிறந்த லீனா மெடினா, திபுரேலோ மெடினா மற்றும் விக்டோரியா லோசியா ஆகியோரின் ஒன்பது குழந்தைகளில் ஒருவராக இருந்துள்ளார். இவ்வளவு இளம் வயதில் லீனா கர்ப்பமான செய்தி, அவரது அன்புக்குரியவர்களுக்கும், அப்பகுதியில் வாழ்ந்த பொதுமக்களுக்கும் மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது. ஆனால், மருத்துவ உலகில் இது அப்படி ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் கூறவேண்டும்.

Lina Medina story
Lina Medina story

மெடினாவுக்கு 'முன்கூட்டிய பருவமடைதல் எனப்படும் ஒரு அரிய மரபணுக் குறைபாடு' இருந்ததாக மருத்துவ உலகத்தில் நம்பப்படுகிறது. இது, ஒரு குழந்தையின் உடலை மிக விரைவாக (பெண்களுக்கு எட்டு வயதுக்கு முன்பும், ஆண்களுக்கு ஒன்பது வயதுக்கு முன்பும்) வயது வந்தோரின் உடலாக மாறச் செய்கிறது.

இந்த பாதிப்புள்ள சிறுவர்களுக்கு பெரும்பாலும் குரல் கனமாகுதல், பிறப்புறுப்புகள் பெரிதாதல் மற்றும் முகத்தில் முடி வளர்தல் போன்றவை ஏற்படும். இந்த பாதிப்புள்ள சிறுமிகளுக்கு பொதுவாக முதல் மாதவிடாய் ஏற்பட்டு, மார்பகங்களும் சீக்கிரமே வளரும். இது ஒவ்வொரு 10,000 குழந்தைகளிலும் சுமார் ஒருவரைப் பாதிக்கிறது என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது. சிறுவர்களை விட ஏறக்குறைய 10 மடங்கு அதிகமான சிறுமிகளுக்கே இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

பெரும்பாலும், முன்கூட்டிய பருவமடைதலுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடிவதில்லை. இருப்பினும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட இளம் பெண்கள், தங்கள் வயதினரை விட வேகமாகப் பருவமடையக்கூடும் என்று சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. லீனா மெடினாவின் விஷயத்தில், அந்த குழந்தை வெறும் எட்டு மாதக் குழந்தையாக இருந்தபோதே முதல் மாதவிடாய் ஏற்பட்டதாக டாக்டர் எட்முண்டோ எஸ்கோமெல் ஒரு மருத்துவ இதழுக்குத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வேறு சில வெளியீடுகள், அவருக்கு மூன்று வயதாக இருந்தபோதே மாதவிடாய் தொடங்கியதாகக் கூறுகின்றன.

Lina Medina pregnancy
Lina Medina pregnancy

5 வயது மெடினாவை மேலும் பரிசோதித்ததில், அந்த குழந்தைக்கு ஏற்கனவே மார்பகங்கள், இயல்பை விட அகலமான இடுப்பு, மற்றும் முதிர்ந்த எலும்பு வளர்ச்சி ஆகியவை ஏற்பட்டிருந்தன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தையின் தந்தை யார் என்றோ, தனது கர்ப்பத்திற்குக் காரணமான அந்தத் தாக்குதலின் சூழ்நிலைகள் குறித்தோ லீனா தனது மருத்துவர்களிடமோ அதிகாரிகளிடமோ ஒருபோதும் தெரிவிக்கவில்லை. ஆனால், லீனாவின் இளம் வயது காரணமாக, அந்த குழந்தைக்கே கூட அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

உள்ளூரில் வெள்ளி வேலை செய்து வந்த லீனாவின் தந்தை திபுரெலோ, தன் மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக சந்தேகிக்கப்பட்டு சிறிது காலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவரை அவரது மகளின் கர்ப்பத்திற்கு பொறுப்பாக்குவதற்கு எந்த ஆதாரமோ அல்லது சாட்சி வாக்குமூலங்களோ கிடைக்காததால், அவர் விடுவிக்கப்பட்டு, அவர் மீதான குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டன. தன் தரப்பில், திபுரெலோ மெடினா, தன் மகளை ஒருபோதும் பாலியல் வன்புணர்வு செய்யவில்லை என்பதை கடுமையாக மறுத்தும் வந்தார்.

லீனா பிறந்த பின்பு அந்த பகுதியில் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அவரது கிராமத்திற்கு அருகில் நடைபெற்ற சில விழாக்களின் போது லீனா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று சில செய்தி நிறுவனங்கள் ஊகித்தன. இருப்பினும், இது ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிப்பிடத்தக்கது. லீனா மெடினாவின் கர்ப்பம் பரவலாக அறியப்பட்டவுடன், அது உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்தது.

பெருவில் உள்ள செய்தித்தாள்கள், லீனாவை நேர்காணல் செய்வதற்கும் படமாக்குவதற்குமான உரிமைகளுக்காக மெதினா குடும்பத்திற்கு ஆயிரக்கணக்கான டாலர்களை வழங்க முன்வந்தன, ஆனால் அது வெற்றி பெறவில்லை. இதற்கிடையில், அமெரிக்காவில் உள்ள செய்தித்தாள்கள் இந்தச் செய்தியைப் பெரிதுபடுத்தி வெளியிட்டன. மேலும் அவைலீனாவை நேர்காணல் செய்யவும் முயற்சித்தன. அந்தக் குடும்பத்தை அமெரிக்காவுக்கு வரவைக்க பணம் தருவதாகவும் சலுகைகள் வழங்கப்பட்டன. ஆனால், மெதினாவும் அவரது குடும்பத்தினரும் பொதுவெளியில் பேச மறுத்துவிட்டனர்.

Youngest mother in history
Youngest mother in history

புகழ் வெளிச்சத்தின் மீதான மெடினாவின் வெறுப்பு இன்றுவரை தொடர்வதாகவே கூறப்படுகிறது. லீனா மெடினாவின் குழந்தைக்கு, அவரை முதன்முதலில் பரிசோதித்த மருத்துவரின் பெயரான ஜெரார்டோ என்ற பெயரே இடப்பட்டது. மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அக்குழந்தை தனது குடும்பத்தின் சொந்த ஊரான டிக்ராபோவிற்குச் சென்றுள்ளது. குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் குழந்தை கல்வி நிபுணரான பால் கோசாக், மெடினா குடும்பத்தைச் சந்திக்க அனுமதி பெற்றார். "லீனா அந்தக் குழந்தையைத் தம்பியாகவே கருதுகிறாள், குடும்பத்தின் மற்றவர்களும் அவ்வாறே கருதுகிறார்கள்," என்று கோசக் தெரிவித்துள்ளார்.

மெடினா வழக்கு குறித்து ஒரு புத்தகம் எழுதிய ஜோஸ் சாண்டோவல் என்ற மகப்பேறு மருத்துவர், மெடினா தனது குழந்தையுடன் விளையாடுவதை விட, பொம்மைகளுடன் விளையாடுவதையே பெரும்பாலும் விரும்பினார் என்றும் கூறியுள்ளார். ஜெரார்டோ மெடினாவைப் பொறுத்தவரை (குழந்தை), மெடினா தனது அக்கா என்று நினைத்தே அவர் வளர்த்துள்ளார். அவருக்கு சுமார் 10 வயதாக இருந்தபோதுதான் உண்மை தெரியவந்துள்ளது.

ஜெரார்டோ மெடினா தனது வாழ்நாளின் பெரும்பகுதி ஆரோக்கியமாக இருந்தபோதிலும், துரதிர்ஷ்டவசமாக 1979-ல் தனது 40-வது வயதிலேயே காலமானார். எலும்பு நோயே அவரது மரணத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

லீனா மெடினாவைப் பொறுத்தவரை, அவர் இன்றுவரை உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. தனது அதிர்ச்சியூட்டும் கர்ப்பத்திற்குப் பிறகு, அவர் பெரு நாட்டில் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்த்துவந்ததாக கூறப்படுகிறது. தனது இளமைப் பருவத்தில், பிரசவத்தின்போது சிகிச்சை அளித்த மருத்துவரிடம் செயலாளராக வேலைக்குச் சேர்ந்தார். அந்தப் பணத்தின் மூலம் கிடைத்த வருமானம், லீனாவின் பள்ளிப் படிப்பை முடிக்க உதவியது. அதேநேரத்தில், லீனா தனது மகன் ஜெரார்டோவையும் படிக்க வைத்தார்.

பின்னர் லீனா 1970களின் முற்பகுதியில் ரவுல் ஜுராடோ என்பவரை மணந்து, தனது 30களில் இரண்டாவது மகனைப் பெற்றெடுத்தார். 2002ம் ஆண்டு நிலவரப்படி, மெடினாவும் ஜுராடோவும், லிமாவில் உள்ள ஒரு ஏழ்மையான பகுதியில் வசித்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறாக உலகையே அத்தியாசத்தில் வாயை பிளக்கவைத்த லீமா உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியாமல் இருந்தாலும், அவரது சிறு வயது என்பது பல்வேறு மர்ம முடிச்சுகளை கொண்டிருந்தது என்றுதான் கூறவேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com