
மதுரை மாவட்டம், கள்ளந்திரி அருகே உள்ள மேல கள்ளந்திரி பகுதியைச் சேர்ந்தவர் சுதா, கண்ணன் தம்பதியினரின் மூத்த மகனான செல்லப் பாண்டி. இவர் அதே பகுதியில் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டும் எண்ணத்தில் சேர்த்து வைத்திருந்த பணத்தை ஆட்டோ வாங்குவதற்காக தெரிந்த சிலரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அவர்கள் ஆட்டோ வாங்க தாமதம் செய்துள்ளனர்.
எனவே செல்லப்பாண்டி ஆட்டோ வாங்க கொடுத்த பணத்தை அவர்களிடம் திரும்ப கேட்டுள்ளார். ஆட்டோவும் வாங்கி தராமல் பணத்தையும் கொடுக்காமல் செல்லப்பாண்டியை சுற்றவிட்டு வந்துள்ளனர். இதனால் செல்லப்பாண்டிக்கும் அந்த கும்பலுக்கு இடையே பணம் கொடுத்தால் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தன்னை சிலர் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாக செல்லப்பாண்டி அவரது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்லப்பாண்டிக்கு சிலர் போன் செய்து அழகர் கோவில் சாலைக்கு வருமாறு அழைத்துள்ளனர், அங்கு சென்ற செல்லப்பாண்டியை நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து அங்கிருந்த மளிகை கடைக்குள் செல்லப் பாண்டி ஓடியுள்ளார் அப்போது விடாமல் துரத்திய மர்ம கும்பல் செல்லப்பாண்டியை ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்லப்பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதற்கிடையே செல்லப்பாண்டியன் தாய் மற்றும் அவரது உறவினர்கள் குற்றாவாளிகளை கைது செய்யும் வரை செல்லப் பாண்டியன் உடலை வாங்க மாட்டோம் என வாக்குவாதம் செய்து வருகின்றனர். இளைஞர் மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.