
மதுரை மாவட்டம் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரும்பாலை கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் அதே பகுதியை சேர்ந்த மணிமேகலை என்ற மாற்று சமுதாய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த இசக்கிமுத்து மற்றும் மணிமேகலை அருகில் உள்ள தனியார் கடையில் வேலை செய்து வந்துள்ளனர். குடி பழக்கத்திற்கு அடிமையான இசக்கிமுத்து ஒருநாள் தெருவில் அமர்ந்து குடுத்து கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர் வேலையை முடித்து விட்டு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அவரை அழைத்த இசக்கிமுத்து அவரிடம் கடைக்கு சென்று சிகெரெட் வாங்கி வர சொல்லியுள்ளார். அதற்கு உதயகுமார் மறுக்கவே போதையில் இருந்த இசக்கிமுத்து அவருடன் வாக்குவாதம் செய்து அவரை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார். இசக்கி முத்துவிடம் இருந்து தப்பித்து சென்ற உதயகுமார் நடந்ததை தனது சகோதரர் பழனியப்பா மற்றும் அவரது நண்பர் காளிதாஸிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மூவரும் இசக்கி முத்துவிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில், இசக்கிமுத்துவின் மனைவி மணிமேகலை அவரது அனைவருடன் திண்டுக்கல் சென்று அங்கேயே ஒரு வருடமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் சொந்த ஊருக்கு செல்லலாம் என இசக்கிமுத்து தெரிவித்ததற்கு மணிமேகலை மறுத்துள்ளார். ஆனால் மணிமேகலையின் பேச்சை கேட்காத இசக்கிக்கு முத்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
பின்னர் மாட்டுத்தாவணியில் உள்ள ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட உதயகுமார் தரப்பினர் இசக்கிமுத்துவை வேவு பார்த்து வந்துள்ளனர். அதே போல் நேற்று முன்தினம் (ஜூலை 20) வேலைக்கு சென்றுவிட்டு தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த இசக்கிமுத்துவை வழி மறுத்த உதயகுமார், பழனியப்பா, காளிதாஸ் ஆகிய மூவரும் வாக்குவாதம் செய்து அவரை கீழே தள்ளி தலையில் கல்லை போட்ட கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இசக்கி முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்துள்ளனர். முன்பகை காரணமாக ஒருவர் ஒரு வருடம் கழித்து தலையில் கல்லை போட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.