
ஈரானின் தலைவரான ஆயத்துல்லா அலி காமனெயி, 2025 ஜூன் 18-ல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் "நிபந்தனையற்ற சரண்" என்ற கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரிச்சிருக்கார. இஸ்ரேல், ஈரானை தாக்கியது பெரும் தவறு என்று கூறிய இவர், அமெரிக்காவின் இராணுவ தலையீடு மாபெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்திருக்கிறார். யார் இவர்? கொஞ்சம் பார்ப்போம்.
86 வயதான ஆயத்துல்லா அலி காமனெயி, 1939-ல் ஈரானின் மஷ்ஹாத் நகரில் ஒரு ஏழ்மையான மதகுரு குடும்பத்தில் பிறந்தவர். இளவயதில் மஷ்ஹாத் மற்றும் கோம் நகரங்களில் மதக் கல்வி பயின்ற இவர், 1962-ல் ஆயத்துல்லா ருஹோல்லா கோமெய்னியின் இஸ்லாமிய புரட்சி இயக்கத்தில் இணைந்து, ஷா ஆட்சிக்கு எதிராகப் போராடினார்.
இதனால் ஆறு முறை கைது செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டார். 1979-ல் இஸ்ரேல் புரட்சி வெற்றி பெற்ற பிறகு, இவர் துணை பாதுகாப்பு அமைச்சராகவும், 1981-89 வரை குடியரசுத் தலைவராகவும் பணியாற்றினார். 1981-ல் ஒரு குண்டு வெடிப்பு தாக்குதலில் இவரது வலது கை முடமானது.
1989-ல் கோமெய்னியின் மறைவுக்குப் பிறகு, காமனெயி ஈரானின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவி, ஈரானின் அரசியலமைப்பு படி, நாட்டின் இராணுவம், நீதித்துறை, மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை கட்டுப்படுத்துது.
இவரது ஆட்சி, 1980-88 ஈரான்-ஈராக் போர், 1997-ல் முகமது காதமியின் சீர்திருத்த இயக்கம், 1999-ல் மக்கள் எழுச்சி, 2009-ல் பசுமை இயக்கம், 2022-ல் மக்ஸா அமினி மரணத்தால் தூண்டப்பட்ட போராட்டங்கள், மற்றும் மேற்கத்திய பொருளாதார தடைகள் உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டு நீடித்து நிற்குது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் முன்னெச்சரிக்கை தாக்குதல்களையும் இவர் ஆட்சி எதிர் கொண்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் அதிஉயர் தலைவர் காமனெயியை "எளிதான இலக்கு" என்று குறிப்பிட்டு, "நிபந்தனையற்ற சரண்" அடைய வேண்டும் என்று கோரினார். இஸ்ரேல்-இரான் மோதல் ஆறாவது நாளாக தொடர்ந்த நிலையில், அமெரிக்கா ஈரானின் வான்வெளியில் முழு கட்டுப்பாடு பெற்றிருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.
இதற்கு பதிலளித்த காமனெயி, இரானிய மக்கள் ஒருபோதும் சரணடைய மாட்டார்கள் என்று திட்டவட்டமாக அறிவிச்சார். "ஈரானை, அதன் மக்களை, வரலாற்றை அறிந்த புத்திசாலிகள், இந்த நாட்டை அச்சுறுத்தும் மொழியில் பேச மாட்டார்கள். ஏன்னா, ஈரானிய மக்கள் சரணடையாதவர்கள்," என்று அவர் மாநில தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரையில் கூறினார்.
காமனெயி மேலும், அமெரிக்காவின் இராணுவ தலையீடு "சீரமைக்க முடியாத பாதிப்புகளை" ஏற்படுத்தும் என்று எச்சரிச்சார். இஸ்ரேல், இரானின் அணு வசதிகள் மற்றும் பிற இலக்குகளை தாக்கியது "பெரும் தவறு" என்று குறிப்பிட்ட அவர், இஸ்ரேலுக்கு "தண்டனை" வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இஸ்ரேல் ஈரான்ன் அணு வசதிகள், எண்ணெய் கிடங்குகள், மற்றும் இராணுவ இலக்குகளை தாக்கியது. இதற்கு பதிலடியாக, ஈரான் "True Promise III" என்ற பெயரில் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள், மற்றும் ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியது. இந்த மோதலில், இரானில் 585-க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் பொதுமக்கள், உயிரிழந்ததாகவும், இஸ்ரேலில் 24 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல், ஈரான் ஃபோர்டோ அணு வசதியை அழிக்க அமெரிக்காவின் "பங்கர் பஸ்டர்" குண்டுகளை பயன்படுத்துவது குறித்து டிரம்ப் பரிசீலிப்பதாக தகவல்கள் உள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.