“எவன் கூட தான் டி பேசுற” - கறி வெட்டும் கத்தியால் மனைவியை குத்தி கொன்ற கணவன்.. போனில் பேசியது உண்மையா?

இதனை நீண்ட நாட்களாக கவனித்து வந்த முஜைதீன் தனது மனைவியை கண்டித்துள்ளார்...
Mangadu Wife Murder Case
Mangadu Wife Murder Case
Published on: 
Updated on: 
1 min read

திருவள்ளூர் மாவட்டம், மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதுடைய முஜைதீன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சோபியா என்பவருக்கும் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் முஜைதீன் இறைச்சி கடையில் கறி வெட்டும் வேலை செய்து வந்திருக்கிறார். எனவே சோபியா வீட்டில் இருந்து மகனை பார்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சோபியா கடந்த சில மாதங்களாக வேறொரு நபருடன் செல்போனில் பேசி பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை நீண்ட நாட்களாக கவனித்து வந்த முஜைதீன் தனது மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் சோபியா தொடர்ந்து அந்த நபருடன் பேசி வந்ததாகத் தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில், நேற்று(அக் 01) இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முஜைதீன், “எவன் கூட தான் டி பேசுற” என கேட்டு இறைச்சி வெட்டும் கத்தியால் சோபியாவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. சோபியாவின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோபியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த முஜைதீனை போலீசார் கைது செய்த போலீசார், அவரிடம் கொலைக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சோபியா போனில் பேசியது யாருடன்? முஜைதீன் கூறுவது உண்மையா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி வேறொரு நபருடன் பேசியதாக கணவர் அவரைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com