

கர்நாடக மாநிலம், பெங்களூரு நாகவார பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவருக்கும் அதே பகுத்தோயை சேர்ந்த கீர்த்தனா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். ராகுல் கிறிஸ்டின் என்பதாலும் கீர்த்தனா இந்து என்பதாலும் இரு வீட்டிலும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். எனவே ஈட்டை விட்ட வெளியேற முடிவு செய்த காதலர்கள் ராகுலும், கீர்த்தனாவும் கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறி கோவாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. தங்களது மகளை காணவில்லை என தேடிய கீர்த்தனாவின் பெற்றோர் தங்களது மகளை கண்டுபிடித்து தர சொல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்போது ராகுல் கீர்த்தனாவுடன் கோவாவில் இருப்பதை அறிந்த ராகுலின் குடும்பத்தினர் அங்கு சென்று அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் ராகுலுக்கும், கீர்த்தனாவுக்கும் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலய வளாகத்தில் வைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கீர்த்தனா “தான் வேளாங்கண்ணியில் இருப்பதாகவும், ராகுலுக்கும் தனக்கும் திருமணம் முடிந்து விட்டது எனவும் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்” ஏற்கனவே கீர்த்தனாவை தேடி வந்த உறவினர்கள் உடனடியாக வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர்.
அப்போது கீர்த்தனாவின் பெற்றோர்கள் அவரிடம் “திருமணம் முடிந்துவிட்டது. இனி உங்களை பிரிக்க மாட்டோம் நீங்கள் அங்கேயே இருங்கள் நாங்கள் வந்து பெங்களூருக்கு அழைத்து செல்கிறோம்” என கூறியதாக சொல்லப்படுகிறது. இதை நம்பி அவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ளனர். இதனையடுத்து வேளாங்கண்ணிக்கு நேற்று வந்த கீர்த்தனாவின் உறவினர்கள் 15 க்கும் மேற்பட்டோர் திடீரென ராகுல் தங்கியிருந்த விடுதி அறைக்குள் புகுந்து கீர்த்தனாவை வலுக்கட்டாயமாக தூக்கி கடத்தி சென்றுள்ளனர். இதனை தடுத்த காதலன் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதில் ராகுல், அவரது தந்தை டேனியல், தாய் கலையரசி, மாமா பிரகாஷ் ஆகியோருக்கு தலை, கை, முதுகு, கால் என சராமரியாக வெட்டு விழுந்துள்ளது. வெட்டுக்காயங்களுடன் கிடந்தவர்களை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தகவல் அறிந்து வந்த வேளாங்கண்ணி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தொடர்ந்து பெண்ணின் தாய், தந்தை உள்ளிட்ட வெங்கோபிராவ, புனித் குமார், ராம்நாத் ராவ், விஜய், ராஜா ராவ், கார்த்திக், மகேஸ்வரி, கவிதா, ஆகிய பெண்ணின் உறவினர்களை கடலூர் அருகே நேற்று கைது செய்து பெண்ணை மீட்ட போலீசார் அவரது உறவினர்களை இன்று காலை நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கீழ்வேளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தற்போது ஆஜர் படுத்தியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்