நெல்லை மாவட்டம், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 41 வயதுடைய சிவ சுந்தர்ராஜன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெளி பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 39 வயதுடைய பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் சிவ சுந்தர்ராஜன் மனைவி பி எச் டி பட்டம் பெற்றவர் என்பதால் அருகில் உள்ள கல்லூரியில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு முயற்சி செய்து வந்துள்ளார்.
இதனை அறிந்த சிவ சுந்தர்ராஜன் பழக்கமான பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இருக்கும் பாலகுமார் என்பவர் சிவ சுந்தர்ராஜன் மனைவிக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணி வாங்கி தருவதாக கூறி சிவ சுந்தர்ராஜனிடன் ரூபாய் 20 லட்சம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. பணம் பெற்ற பாலகுமார் மீண்டும் சிவா சுந்தர்ராஜன் பணி குறித்து கேட்டால் அலட்சியமாக பதில் கூறி வந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணம் பெற்ற பாலகுமார் இன்று வரை வேலையும் வாங்கி தராமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தொடர்ந்து பணத்தை கேட்டு சிவ சுந்தர்ராஜன் பாலகுமாரை தொந்தரவு செய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவசுந்தராஜனிடம் பேசிய பாலகுமார் இன்றைய தினம் பணத்தை திருப்பி தருவதாக தனது வீட்டிற்கு வந்து வாங்கிக் கொள்ளுமாறு பாலகுமார் கூறியதாக தெரிகிறது. எனவே பணத்தை வாங்க சிவ சுந்தர்ராஜன் தனது தாயுடன் நேற்றுக்கு பாலகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் பணத்தை வாங்குவதற்காக பாலகுமார் வீட்டிற்கு சிவ சுந்தர்ராஜன் பணத்தை கேட்டுள்ளார். அப்போது தன்னிடம் தற்போது பணம் இல்லை என பாலகுமார் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவ சுந்தர்ராஜன் பாலகுமாரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்ட நிலையில் சிவ சுந்தர்ராஜானை பாலகுமார் அரிவாள் வெட்டு உள்ளார்.
இதில் சிவ சுந்தராஜனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த சிவ சுந்தர்ராஜனின் தயார் அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். மேலும் இது குறித்து காவல் துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாலகுமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.