
நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள சங்கநேரி பகுதியைச் சேர்ந்த பீட்டர் என்பவரின் மகன் 27 வயதான பிரபுதாஸ். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் தனது நண்பருடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார், அப்போது பிரபுதாஸிற்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது, இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில் கருது வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் அப்பெண் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருந்தார்.
இதனை அறிந்து கொண்ட பிரபுதாஸ் தனது காதலியை “என்னுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன்” என மிரட்டியதாக சொல்லப்படுகிறது, இதனால் பயந்த அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அடுத்து சொந்த ஊருக்கு வந்த பிரபுதாஸ் தச்சு வேலை செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபுதாஸிற்கு திருமணம் செய்து வைக்கும் நோக்கத்தில் வரன் பார்த்து வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனை அறிந்து கொண்ட பிரபுதாஸின் முன்னாள் காதலியின் உறவினர்கள் பிரபுதாஸ் மீதும் கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.
எனவே பிரபுதாஸை கொலை செய்ய நினைத்து அவரை நோட்டமிட்ட குற்றவாளிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நக்கனேரி கோலியன்குளம் சாலையில் வேலைக்கு சென்றுவிட்டு தனது நபருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் வழிமறித்து பிரபுதாஸை வினோத், லிங்குசாமி, மகராஜன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேர் சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளனர். பிரபுதாஸ் ரத்தவெள்ளத்தில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரபுதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்து என்ற கோணத்தில் போலீசார் வழக்கை விசாரித்து வந்த நிலையில் பிரேத பரிசோதனையின் முடிவில் கொலை என தெரியவந்துள்ளது, இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வினோத், லிங்குசாமி, மகாராஜன், அருண் குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இளைஞர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.