“அம்பானி, அதனிக்காக அமெரிக்காவை எதிர்க்கிறாரா மோடி!? ஒரே அணியில் ரஷ்யா- இந்தியா -சீனா!! மூளும் யுத்தம்!?

மோடி தற்போது’விவசாயிகளின் நலன் காக்க எந்த எல்லைக்கும் செல்வோம் என பேசி உள்ளார்” இதற்கும்...
Modi with putin -avif
Modi with putin -avif
Published on
Updated on
2 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஏப்ரல் 2 -ஆம் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு  ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அதிக வரி விதிப்புக்குளான  நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட கால அவகாசம் தரும் விதமாக, கூடுதல் வரி அமலை ஜூலை 9 -ஆம் தேதி வரை நீட்டித்து டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

டிரம்பின் வரி அறிவிப்பு: பின்னணி

டிரம்ப், தனது இரண்டாவது ஆட்சியில், “முதலில் அமெரிக்கா” (America First) கொள்கையை முன்னெடுத்து, உலக நாடுகளுடனான வர்த்தக உறவுகளை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 2025 ஏப்ரல் 2-ல், அமெரிக்காவின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பை மீட்டெடுக்க, “பரஸ்பர வரி” (reciprocal tariffs) கொள்கையை அறிவித்தார். இதன்படி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது 26% வரி விதிக்கப்பட்டு, பின்னர் ஆகஸ்ட் 1 வரை இந்த வரி நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் கடந்த ஜூலை 30 இந்தியாவுக்கு எதிராக 25% வரி விதிப்பு மற்றும் கூடுதல் தண்டனை (Fine) வரி அறிவித்து, பகீர் கிளப்பியிருந்தார்.. இந்தியாவை “நண்பர்” என்று  சொன்னாலும், அதன் வர்த்தகக் கொள்கைகளையும், ரஷ்யாவுடனான உறவையும் காரணம் காட்டி, இந்த முடிவை எடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பு, இந்திய-அமெரிக்க உறவுகளில் ஒரு புது பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது..

இந்தியாவின் மீது இந்த வரி விதிப்பு, அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை (trade deficit) குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதி. 2024-ல், அமெரிக்கா இந்தியாவில் இருந்து 87 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்தது, ஆனால்  இந்தியாவுக்கு 42 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்தது. இந்த பற்றாக்குறை, டிரம்புக்கு ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. மேலும், இந்தியாவின் உயர் வரிகள், அமெரிக்க பொருட்களுக்கு கடுமையான வர்த்தக தடைகள், மற்றும் ரஷ்யாவுடனான நெருக்கமான உறவு ஆகியவை டிரம்பின் இந்த முடிவுக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.

தற்போது அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 25% வரியோடு சேர்த்து ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியாவுக்கு அபராதமும் விதித்துள்ளார். இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட  8 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் மீதான கூடுதல் வரி இன்று முதல் (07-08-25)  அமலுக்கு வருகிறது.

இதனை அடிப்படையில் நேற்று இந்தியா மீது அமெரிக்கா கூடுதலாக 25% வரியை  விதித்துள்ளது. இதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். ரஷியாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களின் மீதான வரி 50% உயர்ந்திருக்கிறது. 

நகைகள் ஆடைகள் மீதான ஏற்றுமதி பாதிப்பு!!!

இந்த 50% வரி உயர்வால் ஜவுளி, ரத்தினங்கள், தங்க நகைகள், இறால் தோல் சார்ந்த பொருட்கள், எந்திரங்கள், எலக்ட்ரானிக், ரசாயன பொருட்கள் மீதான ஏற்றுமதி 40 -50% -வரை பாதிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை விட்ட அமெரிக்கா!

இது தொடர்பாக அமெரிக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் “உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் வெளியுறவு கொள்கைக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.  ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெரும் இந்தியா -வின் செயல்  ரஷ்யாவின் தீச்செயல்களுக்கு பதிலடி கொடுக்க முயலும் அமெரிக்காவிற்கு இடையூறாக உள்ளது. எனவேதான் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

முதல்முறை..

இந்நிலையில் அமெரிக்காவை முதல்முறையாக எதிர்த்துள்ளார். சட்ட விரோத குடியேறிகள் எனக்கூறப்பட்டு இந்திய மக்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு கொண்டுவரப்பட்டபோதும் கூட வாய்திறவாமல் இருந்த மோடி தற்போது’விவசாயிகளின் நலன் காக்க எந்த எல்லைக்கும் செல்வோம் என பேசி உள்ளார்” இதற்கும் வரிவிதிப்புக்கும் என்ன காரணம் என்று யோசிக்கலாம், அமெரிக்கா தன்னிடம் உள்ள மரபணு மாற்றப்பட்ட சோயா விதைகளை இந்தியாவின் பால் உற்பத்தியில் பயன்படுத்த அனுமதி கேட்டது, அதற்கு மறுப்பு தெரிவித்ததற்காகவே இந்த தடை” . என மோடி பேசியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பத்திரிகையாளர் ஸுபேர் பேசுகையில் “டிரம்ப் இயல்பிலேயே ஒரு வணிகர், அவரின் போரே வர்த்தக ரீதியான தடைகள், தண்டனைகள் தான். 

ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ நாடுகளின் வற்புறுத்தலால் நெருக்கடியால் தான் அவர் உக்ரனை பாதுகாக்கிறார்,அதனால் தன அவருக்கு புதினுக்கும் முட்டிக்கொண்டது என்பது நாம் அறிந்த உண்மை. ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவிற்காக எண்ணெய் வாங்குவது ‘அதானி, அம்பானி” நிறுவனங்கள் தான். அதனால் மோடியின் நண்பர்கள் வருமானத்திற்கு இடையூறு ஏற்படுவதால் தான் அமெரிக்காவை எதிர்க்க துவங்கிவிட்டார். அதற்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவு தருகின்றது. அமெரிக்காவை முதன் முறையாக இந்தியா எதிர்க்கிறது. மேலும் ரஷ்யா, சீனா, இந்தியாவின் கை ஓங்கும்போது இயல்பாக ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்காவை விரும்பாத நாடுகள் இந்த பக்கம் சேர வாய்ப்புண்டு இது 3 -ஆவது உலக யுத்தத்திற்கு வழிவகுக்கலாம், என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com